சிறப்பான போஸ்... ஆனா லைட்டா வில்லத்தனம் மிக்சிங்... சூப்பரப்பு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்காக தயாராகி வருகிறார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில் வழக்கம்போல நடாஷா ஸ்டான்கோவிக்குடன் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இருவரும் மிகவும் ஸ்டைலாக படிகட்டுகளில் நிற்பது போல போஸ் கொடுத்துள்ளனர். புகைப்படத்தில் நடாஷா சிரிப்பை மிஸ் செய்ய, ஹர்திக் அதிகமாகவே சிரிக்கிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்காக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இதற்கிடையில் நடாஷாவுடனான தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும் அவர் மறக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடாஷாவின் பிறந்தநாளையொட்டி சில புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் அழகான பிங்க் நிற கவுனில், தலையில் தொப்பியுடன் நடாஷா ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். ஹர்திக் பாண்டியாவும் கருப்பு ஜாக்கெட், சன்கிளாஸ், ஸ்னீக்கர்ஸ் என்று அதகளப்படுத்துகிறார். ஆனால் நடாஷாவிடம் இல்லாத ஒன்று பாண்டியாவிடம் காணப்படுகிறது. அது ஸ்டைலிஷ்ஷான சிரிப்புதான்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் லைக்குகள் அள்ளுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik is stylish as ever in a black jacket, white sneakers and sunglasses
Story first published: Sunday, March 7, 2021, 18:08 [IST]
Other articles published on Mar 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X