For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிக்கு எதிரான முதல் டி20.. மைக்கேல் கணிப்பு நிஜமானது.. நியாயமாக நடந்து கொண்ட ஹர்திக்

ராஞ்சி : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கியது. இதுவரை இங்கு 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வென்று இருக்கிறது.

இந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா எப்போதுமே ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவது போல் , பனிப்பொழிவாக இருந்தாலும் முதலில் டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்வார்.

இதற்கு, சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தவே இப்படி செய்வேன் என்று விளக்கம் வேறு கொடுப்பார். ஆனால், இம்முறை அப்படி செய்தால் தோல்வி உறுதி என்று நாம் ஏற்கனவே கணித்தோம்.

விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்! விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!

சரியான கணிப்பு

சரியான கணிப்பு

அதன் படி, இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹேர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் நமது கணிப்பு படி, பிளேயிங் லெவனில் இஷான் கிஷனுக்கும், சுப்மான் கில்லுக்கும் வாய்ப்பு கொடுத்தார். இதே போன்று நாம் கணித்த வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தற்போது அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஹர்திக் பேச்சு

ஹர்திக் பேச்சு

டாஸ் வென்றது குறித்து பேசிய ஹர்திக், ஆடுகளம் பார்க்க நன்றாக இருக்கிறது. இப்போதே பனிப்பொழிவு தொடங்கி விட்டது. இதனால் முதலில் பந்துவீசுகிறோம். எங்கள் அணியில் இருப்பவர்கள் இளம் வீரர்கள். இன்று களத்திற்கு போய் சிறப்பாக விளையாடுங்கள் என்பது தான் என்னுடைய அறிவுரையாக இருக்கும்.

சாண்ட்னர் கருத்து

சாண்ட்னர் கருத்து

டி20 போட்டிக்கு முன்பு ஒருநாள் போட்டியில் விளையாடியது நல்லது என்றே நினைக்கிறேன். நயூசிலாந்து எப்படி விளையாடுவார்கள் என்று தற்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது என்றும் ஹர்திக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்டனர், நாங்களும் முதலில் பந்துவீச தான் இருந்தோம். தற்போது அதிக ரன் இடித்து நெருக்கடி கொடுக்க முயற்சி செய்வோம் என்று மிட்செல் சாண்ட்னர் தெரிவித்தார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1,இஷான் கிஷன் 2, சுப்மான் கில், 3, ராகுல் திரிபாதி, 4, சூர்யகுமார் யாதவ், 5, தீபக் ஹூடா, 6, ஹர்திக் பாண்டியா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சிவம் மவி, 9, ஆர்ஸ்தீப் சிங், 10, உம்ரான் மாலிக், 11, குல்தீப் யாதவ்

Story first published: Friday, January 27, 2023, 19:06 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Hardik Pandya brilliant decision in toss appreciated by fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X