For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேட்ச்சையே புரட்டி போட்ட அந்த ஒரு கேட்ச்..!! இந்தியாவிடம் தோற்று புலம்பி தள்ளும் ஆஸி. வீரர்கள்

லண்டன்:ஆஸ்திரேலியா தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பாண்டியாவின் கேட்ச் மிஸ் செய்தது தான் பிரதான விவாதமாக ஆஸி. அணிக்குள் உருவெடுத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் நேற்றைய முக்கிய ஆட்டம் இன்னும் பல நாட்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். அந்தளவுக்கு கிரிக்கெட் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணியின் கில்லியான ஆட்டம் தான் அதற்கு காரணம்.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பிட்ச் ஒரு வகையில் கை கொடுத்தது. ஆரம்ப கட்டத்தில் பந்து ஸ்விங் ஆகாமல் இருந்தது. அணியின் ரன் விகிதம் உயர அதுவும் ஒரு காரணம்.

அம்மாடி...! இந்த ஒரே மேட்சல இவ்வளவு சுவாரசியங்கள், இத்தனை சாதனைகளா..? ரசிகர்கள் ஆச்சர்யம் அம்மாடி...! இந்த ஒரே மேட்சல இவ்வளவு சுவாரசியங்கள், இத்தனை சாதனைகளா..? ரசிகர்கள் ஆச்சர்யம்

தவான் 117

தவான் 117

ரோகித், தவான் அருமையான தொடக்கம் தந்தனர். 117 ரன்களில் சாதனை சதத்துடன் தவான் வெளியேறி போது அணியின் ஸ்கோர் 220 ரன்கள். 37 ஓவர்கள் முடிந்திருந்த நேரம். கோலியும் அற்புதமாக களத்தில் நின்றார்.

எதிர்பாராத சம்பவம்

எதிர்பாராத சம்பவம்

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் ஹர்திக் பாண்டியாவை 4ம் நிலையில் களமிறங்கினார். இந்திய அணியின் இந்த முடிவு ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்திருக்க வேண்டிய ஒன்றாகும். காரணம்.... பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு அழகான கேட்ச்சை அள்ளி கொடுத்தார்.

எளிதான கேட்ச்

எளிதான கேட்ச்

அதாவது... கூல்டர் நைல் பந்தை அவர் அடிக்கிறார். அது எட்ஜாகி விக்கெட் கீப்பரை நோக்கி செல்கிறது. வழக்கமான, எளிதான அந்த கேட்சை.. ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்காமல் கோட்டை விட்டார். கூல்ட்டர் நைலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

அப்போது பாண்டியா எடுத்த ரன் பூஜ்யம்... டக்கில் போயிருக்க வேண்டியவர் அதன் பிறகு ருத்ர தாண்டவம் ஆடினார். 27 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசி தள்ளினார். அவர் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 46 ஓவர்களில் இந்தியா 300 ரன்களை தாண்டியது. சொல்லப் போனால், கடைசி 10 ஓவர்களில் 117 ரன்களை விளாசி தள்ளியது.

நிலைமை வராது

நிலைமை வராது

ஒரு வேளை பாண்டியாவை டக்கில் அவுட்டாகி இருந்தால் அவருக்கு அடுத்து களம் இறங்குபவர் இந்த அளவுக்கு ரன்களை எடுத்து கொடுத்து இருக்க முடியாது. பாண்டியாவை அந்தக் கேட்ச் மூலம் வீழ்த்தியிருந்தால் அந்த அணி 353 ரன்களை விரட்டும் இக்கட்டான நிலைமை உருவாகி இருக்காது.

வரலாறு மாறியது

வரலாறு மாறியது

அதாவது 300 அல்லது 320 ரன்கள் வரை விரட்டும் வாய்ப்பு கிடைத்து, போட்டியையே ஆஸி. தன்வயப்படுத்தி இருக்கலாம். அந்த ஒரு கேட்ச்... உலக கோப்பையில் ஆஸியின் வரலாற்றை தவிடுபொடியாக்கி இருக்கிறது. நடப்பு உலக கோப்பையின் மறக்க முடியாத போட்டியாக மாறியிருக்கிறது. ஆக மொத்தத்தில் கேரி கோட்டை விட்ட கேட்சால்.. இந்திய அணியின் வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது என்று கூறலாம்.

Story first published: Monday, June 10, 2019, 12:53 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
Hardik pandya catch missed by Alex Carey costs defeat for Australia against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X