For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கபில் தேவ், இம்ரான் கான் பக்கத்துல கூட அந்த தம்பியால வர முடியாது.. இந்திய வீரரை விளாசிய பாக் வீரர்!

கராச்சி : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஹர்திக் பண்டியா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் ஆல் - ரவுண்டர் அப்துல் ரசாக்.

Recommended Video

ஹர்திக் பாண்டியா கபில்தேவ் பக்கத்துல கூட வர முடியாது

ஹர்திக் பண்டியா அதிரடி பேட்டிங் மற்றும் அதிவேக பந்துவீச்சில் கலக்கலாக செயல்பட்டு வந்தார்.

அவரது பேட்டிங் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. சில சமயம் எதிரணிகளை அவர் பந்தாடும் விதம் பெரும் பாராட்டைப் பெற்றது.

பாண்டிங் செய்யாத சாதனையை கூட பண்ணிருக்காரு.. அவர் மோசமான பேட்ஸ்மேனா? ஆஸி. டிவியை வெளுத்த ரசிகர்கள்!பாண்டிங் செய்யாத சாதனையை கூட பண்ணிருக்காரு.. அவர் மோசமான பேட்ஸ்மேனா? ஆஸி. டிவியை வெளுத்த ரசிகர்கள்!

ஒப்பீடு

ஒப்பீடு

அதனாலேயே அவரை பலரும், முன்னாள் இந்திய அணி கேப்டனும் ஆல் - ரவுண்டருமான கபில் தேவ்வுடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். ஆனால், கபில் தேவ், இம்ரான் கான் அருகில் கூட ஹர்திக் பண்டியாவால் போக முடியாது என கூறி உள்ளார் ரசாக்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஹர்திக் பண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் மூலம், இந்திய அணியில் இடம் பெற்றார். அப்போது முதல் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.

கபில் தேவுக்குப் பின்..

கபில் தேவுக்குப் பின்..

இந்திய அணியில் கபில் தேவுக்குப் பின் எந்த ஒரு வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் கூட அமையவில்லை. அதிலும், கபில் தேவ் போன்ற அதிரடி ஆட்டம் ஆடும் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் இல்லை. அதனால், நீண்ட நாள் கழித்து அப்படி ஒரு வீரரைப் பார்த்ததும் ஒப்பீடுகள் துவங்கின.

காயம்

காயம்

ஆனால், ஹர்திக் பண்டியா தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இடை இடையே பல போட்டிகளில் காயத்தால் இடம் பெற முடியவில்லை. அதே போல, அவர் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வென்று கொடுத்த போட்டிகளும் மிகக் குறைவே.

பணத்தின் பின்னே…

பணத்தின் பின்னே…

ஹர்திக் பண்டியா, கபில் தேவுக்கு இணையான வீரர் இல்லை என பலரும் கூறிய நிலையில், அப்துல் ரசாக் ஒரு படி மேலே போய் அவர் பணத்தின் பின்னே சென்று விட்டார் என்றும், கபில் தேவ், இம்ரான் கான் அருகே கூட அவரால் செல்ல முடியாது என்றும் கூறி உள்ளார்.

இன்னும் சிறப்பாக செயல்படலாம்

இன்னும் சிறப்பாக செயல்படலாம்

"பண்டியா நல்ல வீரர். ஆனால், அவர் சிறந்த ஆல் - ரவுண்டராக இன்னும் சிறப்பாக செயல்படலாம். கடின உழைப்பை பொறுத்து தான் அது உள்ளது. விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை என்றால் அது உங்களை தள்ளிக் கொண்டு போய் விடும்" என்றார் ரசாக்.

பணம் காரணம்!

பணம் காரணம்!

"அவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார் செய்து கொள்ள வேண்டும். அவர் சில காலம் முன் அவர் அதிகமாக காயமடைந்து வந்தார். நீங்கள் அதிக பணம் சம்பாதித்தால், ஓய்வாக இருக்க விரும்புவீர்கள். இது எல்லா வீரருக்கும் பொருந்தும்" என்றார் அப்துல் ரசாக்.

கபில், இம்ரான் ஒப்பீடு

கபில், இம்ரான் ஒப்பீடு

கபில் தேவ், இம்ரான் கான் எந்த காலத்திலும் சிறந்த ஆல் ரவுண்டர்கள். அவர்கள் அருகே கூட ஹர்திக் பண்டியா இல்லை. நான் கூட ஆல் - ரவுண்டர் தான், அதற்காக நான் இம்ரான் கானுடன் என்னை ஒப்பிட மாட்டேன்" என்றார் அப்துல் ரசாக்.

Story first published: Sunday, May 3, 2020, 9:15 [IST]
Other articles published on May 3, 2020
English summary
Hardik Pandya is nowhere near Kapil Dev or Imran Khan says Abdul Razzaq
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X