For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களை பிரமிக்க வைத்த அயர்லாந்து வீரர்.. பரிசு வழங்கி கவுரவித்த ஹர்திக்.. ஐபிஎல்லுக்கு வாங்க!

டுபிளின்:இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணியின் 22 வயதான வீரர் ஹாரி டெக்டார் தனது பேட்டிங் மூலம் பட்டையை கிளப்பினார்.

மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போது முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 22 ரன்களுக்கு 3 விக்கெட் என அயர்லாந்து அணி தடுமாற, போட்டியை காண வந்த ரசிகர்கள் கடுப்பாகினர்.

பறந்த சிக்சர்

பறந்த சிக்சர்

அப்போது தான் களத்தில் என்ட்ரி கொடுத்தார் 22 வயதான ஹாரி டெக்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் இந்திய பந்துவீச்சுக்கு கவுண்டர் அட்டாக் ஆடினார். குறிப்பாக, உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் மிட் விக்கெட் பகுதியில் சிக்சர், புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் கவர் பகுதியில் சிக்சர் என்று கெத்து காட்டினார்.

29 பந்துகளில் அரைசதம்

29 பந்துகளில் அரைசதம்

29 பந்துகளில் அரைசதம் அடித்த டெக்டார், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதனால் அயர்லாந்து அணி ஓவரில் 108 ரன்கள் விளாசியது. இந்த நிலையில், போட்டி முடிந்ததும் டெக்டாரை அழைத்து தனது பேட்டை ஹர்திக் பாண்டியா பரிசாக வழங்கி கௌரவித்தார்.

ஐபிஎல் ஓப்பந்தம்

ஐபிஎல் ஓப்பந்தம்

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, பேட்டிங் ஆடும் போது அவர் சில சூப்பர் ஷாட்களை ஆடி ரன் குவித்தார். அவருக்கு வயது 22 தான் ஆகிறது. அதனால் அவருக்கு ஏன் பேட்டை வழங்கினேன். அவர் இன்னும் அதிக சிக்சர் அடித்து ஐபிஎல் ஓப்பந்தத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஹர்திக் அறிவுரை

ஹர்திக் அறிவுரை

அவருக்கு என் வாழ்த்துக்கள்.. ஹாரிஸ் டெக்டாரை சரியாக பார்த்து கொள்ளுங்கள். அவரை சரியாக வழிநடத்துங்கள். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை பாடத்துக்கும் தான் சொல்கிறேன். இது அவருக்கு சரியாக நடந்தால் அனைத்து கிரிக்கெட் லீக்களிலும் ஒரு ரவுண்ட் கலக்குவார்.

Story first published: Monday, June 27, 2022, 21:52 [IST]
Other articles published on Jun 27, 2022
English summary
Hardik Pandya lauds Harry tector and gifted his bats ரசிகர்களை பிரமிக்க வைத்த அயர்லாந்து வீரர்.. பரிசு வழங்கி கவுரவித்த ஹர்திக்.. ஐபிஎல்லுக்கு வாங்க!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X