For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா செய்த தவறு.. தினேஷ் கார்த்திக்கிற்கு நிகழ்ந்த அவமானம்.. பெருந்தன்மை காட்டிய DK

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டியதால், அவர் களத்துக்கு பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் DK DK என்று கத்தி உற்சாக வரவேற்பு அழைத்தனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி கேப்டனாக முதல் போட்டி.. ரிஷப் பண்ட் முன் காத்திருக்கும் சவால்கள்.. வெற்றி பெறுவாரா பண்ட்இந்திய அணி கேப்டனாக முதல் போட்டி.. ரிஷப் பண்ட் முன் காத்திருக்கும் சவால்கள்.. வெற்றி பெறுவாரா பண்ட்

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி 5 பந்தில் தான் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. எனினும் 19 வது புள்ளி 5வது ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து மிட் விக்கெட் திசைக்கு சென்றது. அப்போது கார்த்திக் ரன் ஓட அழைத்தார்.

திருப்பி அனுப்பிய ஹர்திக்

திருப்பி அனுப்பிய ஹர்திக்

எனினும் ஹர்திக் பாண்டியா சிங்கிள் ஓடாமல் தினேஷ் கார்த்திக்கை திருப்பி அனுப்பினார். இது, ஹர்திக் பாண்டிய செய்த மாபெறும் தவறாக பார்க்கப்படுகிறது. எதிர்முனையில், ஒரு பந்துவீச்சாளர் இருந்தால், அப்படி நடந்து கொண்டதில் தவறு இல்லை. ஆனால் எதிர் திசையில் தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி வீரர் இருந்தும், ஹர்திக் பாண்டியா இப்படி நடந்து கொண்டது, தினேஷ் கார்த்திக்கை அவமானப்படுத்தியது போல் அமைந்தது.

ஹர்திக் செய்த தவறு

ஹர்திக் செய்த தவறு

எனினும் இதனை பெரிதாக நினைக்காத தினேஷ் கார்த்திக் தனது விரலை உயர்த்தி ஓகே என்று காட்டினார். ஆனால், அந்த ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓடாதது, போட்டியில் முடிவில் கூட ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இந்தப் போட்டியில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் கூட போகலாம். ஆனால், முக்கிய போட்டிகளில் இதே போன்ற தவறை ஹர்திக் செய்தால், அது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கும்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ஹர்திக் பாண்டியா இப்படி நடந்து கொண்டதற்கு, அவர் கார்த்திக்கை விட அதிக பந்தை பிடித்ததால் பந்தை எதிர்கொள்வதில், சிரமம் இருக்காது.அதனால் தான் ஹர்திக் பாண்டியா ஓடவில்லை என்ற காரணம் முன் வைக்கப்பட்டாலும், எதிரே நிற்பது கார்த்திக், அவர் ரன் அடிப்பாரா மாட்டாரா என்பதை எப்படி ஹர்திக் பாண்டியாவே எப்படி முடிவு செய்யலாம் என்று கேள்வியும் எழுகிறது.

Story first published: Thursday, June 9, 2022, 21:28 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
Hardik Pandya mistake in last over is considered as disrespect to Karthik ஹர்திக் பாண்டியா செய்த தவறு.. தினேஷ் கார்த்திக்கிற்கு நிகழ்ந்த அவமானம்.. பெருந்தன்மை காட்டிய DK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X