அவ்ளோதான்.. பாண்டியா, ஜடேஜாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது.. அதிர வைத்த முன்னாள் வீரர்!

டெல்லி : இந்திய அணியின் முக்கியமான இரண்டு ஆல் - ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

ENG VS WI 2nd Test | England won by 113 runs

அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியிலும் முக்கிய வீரர்கள் தான். ஆனால், அடுத்து இந்திய அணி பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என அதிரடியாக கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடர் டிசம்பர் 3 துவங்கி ஜனவரி 7 வரை நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் இந்திய அணி ஆட உள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் அதுதான்.

கடைசி டெஸ்ட் தொடர்

கடைசி டெஸ்ட் தொடர்

கடைசியாக இந்திய அணி 2018-19இல் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஆடி இருந்தது. அப்போது டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதன் மூலம் வரலாற்று சாதனை செய்து இருந்தது இந்திய அணி.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

கடந்த முறை நடந்த டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது அவர் இரண்டாவது டெஸ்டில் இருந்து தான் அணியில் இணைந்தார். அவருக்கு போட்டிகளில் வாய்ப்பு அளிக்கவில்லை.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

2018-19இல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா இரண்டு போட்டிகளில் பங்கேற்று இருந்தார். அதைவிட தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். லாக்டவுனுக்கு முன்பு நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

இவர்கள் இருவருக்கும் 2020-21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு ஏன் அணியில் வாய்ப்பு கிடைக்காது என அவர் கூறினார்.

பாண்டியா நிலை

பாண்டியா நிலை

ஹர்திக் பாண்டியா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பல முறை அணியில் வாய்ப்பை இழந்தார். 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒரீரு தொடர்களில் பங்கேற்ற அவர் பின் அறுவை சிகிச்சை செய்து நீண்ட ஓய்வில் இருந்தார்.

போட்டியில் ஆடவில்லை

போட்டியில் ஆடவில்லை

லாக்டவுனுக்கு முன் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது. நீண்ட காலம் கழித்து அவர் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அது நடக்கவில்லை.

எப்படி ஆட முடியும்?

எப்படி ஆட முடியும்?

நீண்ட காலமாக தீவிர கிரிக்கெட் ஆடாத நிலையில் அவரால் எப்படி டெஸ்ட் போட்டிகளில் முழுவதுமாக பங்கேற்க முடியும். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது கடினம் தான் என ஆகாஷ் சோப்ரா கூறினார்.

அஸ்வின் இடத்தில் ஜடேஜா

அஸ்வின் இடத்தில் ஜடேஜா

ஜடேஜாவை ஏன் தேர்வு செய்ய மாட்டார்கள் என அவர் சரியான காரணம் கூறவில்லை. எனினும், இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் இடத்தில் ஜடேஜா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அதுதான் நடந்தது.

குல்தீப் நிலை

குல்தீப் நிலை

அஸ்வின், ஜடேஜா இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மாற்றி. மாற்றி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ்வுக்கு தான் அணியில் வாய்ப்பு கிடைக்காது என சந்தேகிக்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik Pandya, Ravindra Jadeja won’t get chance in Australia test series says Aakash Chopra.
Story first published: Monday, July 20, 2020, 18:41 [IST]
Other articles published on Jul 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X