ஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சை

மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அதன் சர்ச்சைகளும் ஓயவில்லை.

Hardik Pandya-க்கு Gift கொடுத்த தொழில் அதிபர் | IPL Final #Cricket

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா குஜராத்தை சேர்ந்தவர் என்பதால், குஜராத் அணி வெற்றி பெற வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களும் புகார் கூறினர்.

குஜராத் அணி ரன்கள் அடித்த போது எல்லாம், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டார்.

IND VS SA டி20 தொடர்- இந்தியாவுக்கு சவால் அளிக்கும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள்.. விவரம் இதோIND VS SA டி20 தொடர்- இந்தியாவுக்கு சவால் அளிக்கும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள்.. விவரம் இதோ

இதே போன்று பா.ஜ.க. முத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும், ஐபிஎல் இறுதிப் போட்டியில் சூதாட்டம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும். இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள இண்ஸ்டாகிராம் பதிவில், குஜராத் அணியின் லோகோ பதிந்த செயின் ஒன்றை தொழில் அதிபர் வீர் பகாரைய்யா பரிசாக வழங்கியதை கழுத்தில் அணிந்திருந்தார்.

இது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விதிப்படி, தொடர் நடைபெறும் போதோ, முடிந்த பிறகோ பிசிசிஐ அனுமதி இல்லாமல் யாரிடமும் இருந்து பரிசுப் பொருள் வாங்க கூடாது. அப்படி வாங்கினால், அது ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக கிடைத்த பரிசாகவே கருதப்படும். இது போன்று பரிசு கொடுக்க யாராவது அணுகினால் முதலில் பிசிசிஐயிடம் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த செயின் விவகாரம் பிசிசிஐக்கு தெரிந்த நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை, ஒரு வேளை, இந்த விதி குறித்து அறியாமல் ஹர்திக் இப்படி செயல்பட்டு இருக்கலாம். ஏற்கனவே போட்டி பிக்சிங் செய்யப்பட்டது என்று புகார் கூறப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியா செயின் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik Pandya received gift from entrepreneur created controversy ஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சை
Story first published: Saturday, June 4, 2022, 12:17 [IST]
Other articles published on Jun 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X