குட்டி பாண்டியாவின் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக்.. செம வைரல்.. குவிந்த லைக்ஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.

IPL 2020 : UAE planning to allow fans inside stadium

ட்விட்டரில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர். சக வீரர்கள், பிசிசிஐ உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக்... அறிவிப்பு வெளியிட்டது ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்ட்

அதிரடி ஆல் - ரவுண்டர்

அதிரடி ஆல் - ரவுண்டர்

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அதிரடி ஆல் - ரவுண்டர் ஆவார். கபில் தேவ்வுக்குப் பின் இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். இன்னும் சாதிக்க வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் கேப்டன் கோலியின் நம்பகமான வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

காதலியை கை பிடித்தார்

காதலியை கை பிடித்தார்

கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப பயிற்சிகள் மேற்கொண்டு இருந்தார். அந்த காலகட்டத்தில் தான் தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்கை கை பிடித்தார். 2020 பிறந்த அன்று அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

திடீர் நிச்சயம்

திடீர் நிச்சயம்

துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் யாருக்கும் சொல்லாமல் திடீரென ஒரு படகில் வைத்து நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நிச்சயம் செய்து கொண்டார். அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் இருந்த போது அவருடன் திருமணமும் செய்து கொண்டார்.

வீட்டிலேயே திருமணம்

வீட்டிலேயே திருமணம்

மே மாதம் இருவரும் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதோடு, நடாஷா கருவுற்று இருப்பதையும் அறிவித்தது அந்த ஜோடி. இந்த நிலையில் ஜூலை 30 அன்று நடாஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஹர்திக் பாண்டியா குழந்தை பிறந்ததை அறிவித்தார்.

குழந்தை புகைப்படம்

குழந்தை புகைப்படம்

அப்போது குழந்தையின் கை மட்டும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சில மணி நேரங்களில் 10 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை அள்ளிக் குவித்தது. தற்போது குழந்தையின் முழு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் பாண்டியா.

பூரிப்பில் பாண்டியா

பூரிப்பில் பாண்டியா

மருத்துவர்கள் அருகில் இருக்க, ஹர்திக் பாண்டியா குழந்தையை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படம் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் குட்டி பாண்டியாவை கையில் ஏந்தி தந்தையான பூரிப்பில் இருந்தார் ஹர்திக்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அந்த புகைப்படத்துக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி உள்ளனர். பிசிசிஐ, கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சாஹல், கேஎல் ராகுல் என கிரிக்கெட் உலகில் பலரும் ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik Pandya reveals his baby boy photo in twitter. Fans, cricketers pours wishes to the new parents. The picture is also going viral and getting lakhs of likes from fans.
Story first published: Saturday, August 1, 2020, 14:03 [IST]
Other articles published on Aug 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X