For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியில் ஒதுக்கப்பட்ட உம்ரான் மாலிக்.. வெளிப்படையாக உண்மையை கூறிய ஹர்திக் பாண்ட்யா.. விவரம்!

டப்ளின்: இந்திய அணியில் இருந்து உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது.

மழை குறுக்கீட்டால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஓப்பனிங்கே ட்விஸ்ட் தந்த பாண்ட்யா.. திணறிப்போன அயர்லாந்து அணி.. முதல் டி20ல் அபார வெற்றி!! ஓப்பனிங்கே ட்விஸ்ட் தந்த பாண்ட்யா.. திணறிப்போன அயர்லாந்து அணி.. முதல் டி20ல் அபார வெற்றி!!

வெற்றி எப்படி

வெற்றி எப்படி

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வீரர்கள், இந்திய பவுலர்களின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக ஹேரி டெக்டர் என்ற 22 வயது இளம் வீரர் மட்டும் 64 ரன்கள் அடிக்க, அந்த அணி 12 ஓவர்களில் 108/4 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தீபக் ஹூடா ( 47 ), ஹர்திக் பாண்ட்யா (24 ), இஷான் கிஷான் (26) என அதிரடி காட்டியதால் 9.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி அசத்தியது.

உம்ரான் புறக்கணிப்பு

உம்ரான் புறக்கணிப்பு

இந்நிலையில் இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டார். அயர்லாந்து வீரர்கள் வேகத்திற்கு திணறுவார்கள் என தெரிந்தும் உம்ரானுக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் அவர் 14 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பாண்ட்யா விளக்கம்

பாண்ட்யா விளக்கம்

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் அவரிடம் ஒரு பிரச்சினை உள்ளது. அவர் பந்து பழையது ஆன பிறகு தான் சிறப்பாக வீசுகிறார். புதிய பந்துகளில் சற்று சிரமப்படுகிறார். போட்டி 12 ஓவர்கள் தான் என்பதால் அவரை பயன்படுத்த முடியவில்லை,

மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் சவால் கொடுத்ததால், அணியின் முக்கிய பவுலர்களிடம் மீண்டும் செல்லும் நிலைமை உருவாகிவிட்டது. அடுத்த முறை உம்ரான் மாலிக்கிற்கு முழு வாய்ப்பும் கிடைக்கும் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

Story first published: Monday, June 27, 2022, 21:52 [IST]
Other articles published on Jun 27, 2022
English summary
Hardik pandya on umran malik ( இந்தியா vs அயர்லாந்து முதல் டி20 ) அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டது குறித்து கேப்டன் பாண்ட்யா விளக்கியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X