For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்

ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீசும் போது திடீரென கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எனினும் இறுதியில் அனைவருக்கும் ட்விஸ்ட் காத்திருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே ட்விஸ்ட் காத்திருந்தது. பிட்ச் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்விங் ஆனதால் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே பந்தை சந்திப்பதற்கே தடுமாறினர். எனினும் முகமது ஷமியின் வேகத்தில் சிக்கி ஆலன் டக் அவுட்டாகி வெளியேறினார். டெவோன் கான்வே 7 ரன்கள், ஹென்றி நிகோலஸ் 2 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 1 ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் ஆட வேண்டிய கேப்டன் டாம் லேதம் வெறும் 1 ரன்னுக்கு நடையை கட்டினார். இதனால் 15 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 5 விக்கெட்களை இழந்தது.

ஆச்சரிய சம்பவம்

ஆச்சரிய சம்பவம்

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. ஆட்டத்தின் 9வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா வீசிய அவுட் சைட் ஆஃப் பந்தை நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே தடுப்பாட்டம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக பாண்ட்யா பந்தை வீசிய உடனேயே கீழே விழுந்து உருண்டார். அவருக்கு என்ன ஆனது என்றே யாருக்கும் ஒரு நிமிடம் புரியவில்லை. கடைசியில் பார்த்தால் கான்வே அவுட் என அறிவித்தனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

டெவோன் கான்வே ஸ்ட்ரெயிட்டாக பந்தை அடிக்க, மிகவும் கீழாக சென்ற அந்த பந்தை ஹர்திக் பாண்ட்யா ஒற்றை கையில் கீழே விழுந்து பிடித்தார். இவை அனைத்துமே கண் இமைப்பதற்குள் வேகமாக நடந்துவிட்டது. இதனால் அங்கு என்னதான் நடந்தது என ஒரு நிமிடத்திற்கு யாருக்கும் புரியவில்லை. பேட்ஸ்மேனும் விழிப்பிதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிட்ச்-ல் ஏற்பட்ட மாற்றம்

பிட்ச்-ல் ஏற்பட்ட மாற்றம்

போட்டி நடைபெறும் ராய்பூர் மைதானத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டி நடைபெறுகிறது. நன்கு புற்கள் நிறைந்து காணப்படுவதால், முதல் 20 - 25 ஓவர்களுக்கு பந்தில் அதிகப்படியான ஸ்விங் இருக்கின்றன. எனவே அடுத்து ஆடவுள்ள இந்திய அணிக்கும் இதே போன்ற நிலைமை தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, January 21, 2023, 16:45 [IST]
Other articles published on Jan 21, 2023
English summary
Hardik pandya's stunning catch of devon conway in India vs New Zealand 2nd ODI Match, Cricket fans sharing the video
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X