For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திறமை இருந்தும் வாய்ப்பில்லை.. நியூசி, உடனான முதல் டி20.. ரிஸ்க் எடுக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா??

ராஞ்சி: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஹர்திக் பாண்ட்யா எடுத்துள்ள ரிஸ்க்கான முடிவால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மீண்டும் ஒருமுறை தொடரை வெல்ல இந்திய அணியும், ஒருநாள் கிரிக்கெட்டில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டி வருகின்றன.

ஓப்பனிங் இடம்

ஓப்பனிங் இடம்

இந்திய அணியின் ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் கடைசி நேரத்தில் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இதனால் சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள பிரித்வி ஷா, அதிரடி ஃபார்முடன் இருக்கிறார். ஆனால் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் கலக்கிய அளவிற்கு டி20 கிரிக்கெட்டில் இல்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

டி20 கிரிக்கெட்டில் பவர் ப்ளேவில் அதிரடி காட்டுவது முக்கியம். அப்படி பார்த்தால் பிரித்வி ஷா 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அட்டகாசம் செய்கிறார். ஆனால் சுப்மன் கில் 100 ஸ்ட்ரைக் ரேட்டுடன் நிதானமாக ரன் சேர்க்கிறார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் குறைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே பிரித்விக்கு வாய்ப்பு தர வேண்டும் என ரசிகர்கள் கோரி வந்தனர்.

ஹர்திக் முடிவு

ஹர்திக் முடிவு

இந்நிலையில் மாறாக சுப்மன் கில்லுக்கு ஆதரவாக நின்றுள்ளார் ஹர்திக் பாண்ட்யா. இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாண்ட்யா, இஷான் கிஷானும், சுப்மன் கில்லும் தான் ஓப்பனிங் ஆடுவார்கள் எனக்கூறியுள்ளார். கில் சமீப காலமாக நிலையான ஃபார்முடன் ரன் குவித்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 360 ரன்களை குவித்திருந்தார்.

முக்கியமான வாய்ப்பு

முக்கியமான வாய்ப்பு

ஒருவேளை இந்த தொடரை விட்டுவிட்டால் பிரித்வி ஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க நீண்ட நாட்கள் ஆகிவிடும். ஏனென்றால் அணியில் தற்போது இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் ஹூடா, ருதுராஜ் கெயிக்வாட், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா என பல முதற்கட்ட ஓப்பனிங் வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தாண்டி தான் பிரித்விக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

Story first published: Thursday, January 26, 2023, 22:48 [IST]
Other articles published on Jan 26, 2023
English summary
Captain Hardik pandya takes a risk in Team India playing 11 against new zealand for 1s T20 Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X