குடும்பத்தின் புது வரவிற்கு வரவேற்பு... களைகட்டிய வீடு... நன்றி சொன்ன ஆல்-ரவுண்டர்

மும்பை : ஹர்திக் பாண்டியா -நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தின் புதுவரவை வரவேற்கும்வகையில் பாண்டியாவின் வீடு அலங்காரங்களால் களைகட்டியது.

இந்த ஏற்பாடுகளை செய்த தன்னுடைய மச்சினிச்சிக்கு ஹர்திக் பாண்டியா நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு அவருக்கு உதவி செய்தது என்னமோ இன்ஸ்டாகிராம்தான்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டில் முதுகு வலி காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வில் இருந்தார். ஆனாலும் அவரது வாழ்க்கை என்னவோ, நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என்று களைகட்டிதான் இருந்தது.

4 கோப்பைகளை வென்ற ஐபிஎல் கேப்டன்... மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனின் தியரி

தற்போது அடுத்த மாதத்தில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில்

விளையாடவுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த தன்னுடைய குழந்தையை வரவேற்கும் வகையில், அவரது வீடு களைகட்டியிருந்தது. இதற்கு காரணமாக இருந்த தன்னுடைய மச்சினிச்சி பங்குரி ஷர்மாவிற்கு அவர் இன்ஸ்டாகிராம் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
My boys welcome, Thank you Pankhuri sharma -Hardik wrote in his Instagram page
Story first published: Wednesday, August 5, 2020, 20:24 [IST]
Other articles published on Aug 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X