For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

ராஞ்சி: நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கு முன்னதாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 3 முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு முதல் போட்டி நடைபெறுகிறது.

ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட அணி தான் இந்த முறையும் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி டி20 தொடர் இதுதான் ஆகும்.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

3 முக்கிய முடிவுகள்

3 முக்கிய முடிவுகள்

இந்நிலையில் இந்த தொடருக்கான ப்ளேயிங் 11ல் 3 முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. டி20 அணியின் ஓப்பனிங்கில் சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்திய சுப்மன் கில்லால் டி20 ல் சோபிக்க முடியவில்லை. பவர் ப்ளேவில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100 ஆக மட்டுமே உள்ளது. ஆனால் மறுபுறம் பிரித்வி ஷா அதிரடி காட்டுகிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் உள்ளது. எனவே அணிக்கு நிரந்தர ஓப்பனரை தேர்வு செய்தாக வேண்டும்.

ஆல்ரவுண்டர்கள் போட்டி

ஆல்ரவுண்டர்கள் போட்டி

இந்திய அணியில் தற்போது ஆல்ரவுண்டர் இடத்திற்கு தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியிட்டு வருகின்றனர். இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்தினால், தீபக் ஹூடா பேட்டிங்கில் ஹிட்டராக இருக்கிறார். எனவே நியூசிலாந்துக்கு எதிராக பிட்ச்-ஐ பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

ஸ்பின்னர்கள் ஜோடி

ஸ்பின்னர்கள் ஜோடி

இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவருமே உள்ளனர். இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தால், அணியில் வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா ஆகிய 2 ஆல்ரவுண்டர்களுமே இருக்க மாட்டார்கள். பேட்டிங் ஆழமும் பாதிக்கப்படும். எனவே யாரேனும் ஒருவரை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார்.

பாண்ட்யாவின் முடிவு

பாண்ட்யாவின் முடிவு

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரையில் எப்போதுமே அதிகப்படியான பேட்டிங் ஆழமும், பவுலிங் ஆப்ஷன்களும் கொண்டு செல்ல தான் விரும்புகிறார். அந்தவகையில் பார்த்தால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஓப்பனிங்கில் சுப்மன் கில் நிலையான ஃபார்மை காட்டுவதால், அவரை பயன்படுத்தி பார்க்க வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, January 26, 2023, 19:32 [IST]
Other articles published on Jan 26, 2023
English summary
Captain Hardik pandya to take 3 important decision on India playing 11 ahead of India vs New Zealand 1st T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X