For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 ஓவரில் 62 ரன்கள்.. இந்திய மகளிர் அணி அபாரம்.. இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை

கேண்டபரி : இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 தொடரை 2க்கு1 என்று இழந்த இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் வென்று அசத்தியது. இதனையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய செஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

“ஐயோ இதை கவனிக்கவே இல்லையே”.. இந்திய அணியின் முக்கிய குறைபாடு.. பாக். சீனியர் தந்த அட்வைஸ்! “ஐயோ இதை கவனிக்கவே இல்லையே”.. இந்திய அணியின் முக்கிய குறைபாடு.. பாக். சீனியர் தந்த அட்வைஸ்!

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 51 பந்துகளில் 40 ரன்கள் விளாசியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 3வது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். யாஷ்திகா பாட்டியா 26 ரன்களில் வெளியேற,ஹர்மன்பிரித் கவுர், ஹார்லின் டியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஹர்மன்பிரித் 143 ரன்கள்

ஹர்மன்பிரித் 143 ரன்கள்

ஒரு கட்டத்தில் ஹர்மன்பிரித் கவுரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல், இங்கிலாந்து வீராங்கனைகள் தடுமாறினர். 100 பந்துகளில் சதம் விளாசிய அவர், அதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். அடுத்த 11 பந்துகளில் அவர் 43 ரன்களை குவித்தார். இதன் மூலம் 143 ரன்களை விளாசினார். ஹார்லின் டியோல் 58 ரன்கள் விளாசினார்.

கடைசி 3 ஓவர்

கடைசி 3 ஓவர்

இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களை எடுத்தது. இது இந்திய அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். கடைசி 3 ஓவரில் மட்டும் இந்திய அணி 62 ரன்கள் குவித்தது. இதில் 48வது ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இதில் அதிகபட்சமாக டேனி வியாட் 65 ரன்களும், கேப்ஷி மற்றும் ஜோன்ஸ் தலா 39 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து மகளிர் அணி 44.2வது ஓவரில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 21ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹ்ர்மான்பிரித் கவுர் பெற்றார்.

Story first published: Thursday, September 22, 2022, 18:16 [IST]
Other articles published on Sep 22, 2022
English summary
Harmanpreet kaur Blitzering Knock made India won the series vs Eng in odi3
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X