For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சகட்டுமேனிக்கு கேப்டனை திட்டிய மிதாலி ராஜ் மேனேஜர்.. மகளிர் கிரிக்கெட்டில் என்ன பிரச்சனை?

Recommended Video

இந்திய மகளிர் அணியின் அரையிறுதி தோல்வி, கேப்டன் சொல்வது என்ன?- வீடியோ

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குள் உள்ள பூசல் வெடித்து தற்போது வீதிக்கு வந்துள்ளது.

இந்திய மகளிர் அணி மகளிர் உலக டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மூத்த வீரர் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், மிதாலி ராஜின் மேனேஜர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் தளத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்-ஐ சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார்.

மிதாலி இல்லாதது தவறு

மிதாலி இல்லாதது தவறு

முக்கியமான அரையிறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரரை அணியில் சேர்க்காதது தவறு என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கூறி வந்தனர். அது தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என கூறினர்.

சகட்டுமேனிக்கு திட்டு

சகட்டுமேனிக்கு திட்டு

மிதாலி ராஜின் மேனேஜர் அனிஷா குப்தா ஒருபடி மேலே போய் ட்விட்டரில், மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் "சூழ்ச்சி செய்தவர், பொய்யர், தகுதி இல்லதாவர்" என சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார். பின்னர் அந்த பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதோடு அனிஷாவின் ட்விட்டர் கணக்கும் மூடப்பட்டுள்ளது.

தகுதி இல்லாத கேப்டன்

தகுதி இல்லாத கேப்டன்

அனிஷா குப்தாவின் பதிவில் என்ன இடம் பெற்றது என்பது குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன. அனிஷாவின் பதிவில், "இந்திய மகளிர் அணி விளையாட்டை நம்பாமல் அரசியலை நம்புகிறார்கள். மிதாலி ராஜ் இந்தியா - அயர்லாந்து போட்டியில் என்ன செய்தார் என்பதை பார்த்தும், அவரை ஹர்மன்ப்ரீத் எப்படி அணியில் சேர்க்காமல் இருந்தார் என்பது அதிர்ச்சியாக உள்ளது. சூழ்ச்சியும், பொய்யும் நிறைந்து, முதிர்ச்சியற்ற, தகுதி இல்லாத கேப்டன்" என கூறியுள்ளார்.

கேள்வி எழுப்பினார்

கேள்வி எழுப்பினார்

இது பற்றி விளக்கம் அளித்த அனிஷா குப்தா, "இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இப்படி செய்ததாக சில அறிக்கைகள் வருகின்றன. ஆனால், ஒரு அரையிறுதிப் போட்டியில் மிகவும் மூத்த வீரரை, அனுபவம் வாய்ந்த ஒருவரை அணியில் இருந்து நீக்குவீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்

2 அரைசதம் அடித்தார்

2 அரைசதம் அடித்தார்

மிதாலி ராஜ் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான குரூப் போட்டிகளில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். கடைசி குரூப் போட்டியில் காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடவில்லை. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

வெற்றியில் மிதாலி ராஜ்

வெற்றியில் மிதாலி ராஜ்

அந்த வெற்றி பெற்ற போட்டியின் அணியோடு அரையிறுதியில் களம் இறங்க முடிவு செய்தோம் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூறி இருந்தார். ஆனால், அதற்கு முன் மூன்று போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளில் மிதாலி ராஜ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 24, 2018, 11:14 [IST]
Other articles published on Nov 24, 2018
English summary
Harrmanpreet Kaur is manipulative and lying cheat says Mithali Raj manager
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X