For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த தம்பி இருக்காருல்ல...? அப்ப அவரு எதுக்கு..? சொல்லி வைத்து தோனியை சீண்டும் பிரபல வர்ணனையாளர்

மும்பை: முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருக்கும் போது, இனி இவர் அணியில் எதற்கு என்று தோனியை மறைமுகமாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விமர்சித்துள்ளார்.

உலக கோப்பை தொடரை அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் சில தினங்கள் முன்பு வெளியிட்டார். அந்த தொடரில் தோனி இருப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

2 மாதம்

2 மாதம்

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், 2 மாதத்திற்கு ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக அவரே கூறினார். ஆகவே, அந்த தொடரில் அவரை அணி நிர்வாகம் எடுக்கவில்லை.

கீப்பர் பன்ட்

கீப்பர் பன்ட்

அந்த தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் முதன்மை கீப்பராக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார்.

முக்கிய கேள்வி

முக்கிய கேள்வி

இருப்பினும் ரிஷப் பன்ட் டெஸ்ட் போட்டியிலும் முதன்மை கீப்பராக இருப்பார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் பிரபல கிரிக்கெட வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தோனியை மறைமுகமாக விமர்சித்து ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

ஏன் இருக்கிறார்?

டுவிட்டர் பதிவின் மூலம் அவர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது: முதன்மை கீப்பராக ரிஷப் பன்ட் இருக்கும் பொழுது விருத்திமான் சஹா ஏன் அணியில் இடம்பெற்றுள்ளார்? அவரை எடுப்பதற்கான காரணம் என்ன?

தோனியை சீண்டுகிறாரா?

தோனியை சீண்டுகிறாரா?

பாதுகாப்பிற்காக 2வது கீப்பராக சஹா எடுக்கப்பட்டிருந்தால், அதே பாதுகாப்பிற்காக இன்னொரு கீப்பரை ஏன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் இந்த பதிவு ஏதோ அணியின் மீதான அக்கறை என்று எடுத்துக் கொண்டாலும், தோனியை குறி வைத்தே தான் அவர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, July 23, 2019, 21:18 [IST]
Other articles published on Jul 23, 2019
English summary
Harsha bhogle askes bcci about why there are 2 wicket keepers?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X