For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?நீங்க வச்சது தான் சட்டமா? இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய ஹர்ஸா போக்லே

மும்பை : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும், அந்த நாட்டு ஊடகங்களையும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மான்கட் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை மான்கட் செய்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக போகிறது.

ஆனால் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஒயிட் வாஷ் செய்ததை இங்கிலாந்து நாட்டினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் இன்னமும் தீப்தி சர்மா குறித்தும் இந்திய மகளிர் அணி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

வேதனை அளிக்கிறது

வேதனை அளிக்கிறது

இதற்கு நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ், இங்கிலாந்துக்கு தக்க பதிலடி தந்த நிலையில் தற்போது ஹர்ஷா போக்லே ட்விட்டரில் நீண்ட பதிவு ஒன்றை போட்டு இங்கிலாந்தை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் இங்கிலாந்து ஊடகங்கள் தொடர்ந்து மான்கட் விவகாரத்தில் ஒரு இளம் வீராங்கனைய குறித்து கேள்வி எழுப்பி வருவது வேதனை அளிக்கிறது.

ஆதிக்க புத்தி

ஆதிக்க புத்தி

தீப்தி சர்மா ஐசிசி விதியின் படியே நடந்திருக்கிறார். சார்லி டீன் தொடர்ந்து அந்த தவறை செய்து வந்தது மூலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து உடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற திமிர் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது. இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க புத்தி இன்னும் இங்கிலாந்து கடைப்பிடித்து வருகிறது.

இங்கிலாந்து கலாச்சாரம்

இங்கிலாந்து கலாச்சாரம்

இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் செயல்படுத்தும் ஒன்றை மற்ற கிரிக்கெட் நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.இதேபோன்று ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அது மோசமான ஆடுகளம் என்றும், வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் நல்ல ஆடுகளம் என்றும் இங்கிலாந்து நினைக்கிறது. அதே கலாச்சாரத்தை நாமும் கடைப்பிடித்து வருகிறோம்.

மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்

மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்

பந்துவீச்சாளர்கள் முனையில் உள்ள பேட்ஸ்மனை ரன் அவுட் ஆக்க கூடாது என்று உலக நாடுகளுக்கு இங்கிலாந்து சொல்கிறது. அப்படி அவுட் செய்யும் நபர்களை இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. மற்ற நாடுகளில் அடிமைத்தன புத்தியில் இருந்து விலகச் சொல்லி நாங்களும் கேட்போம்.விதிகள் படி விளையாடுவது மிகவும் சுலபம். உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

விதிப்படி விளையாடுங்கள்

விதிப்படி விளையாடுங்கள்

ஐசிசியின் விதிப்படி பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும். நீங்கள் அதை மதித்தால் விளையாட்டு சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மீதும் கேள்விகள் வீசப்படும். தொடர்ந்து தீப்தி சர்மா மீது விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐசிசி பொறுப்பில் உள்ளவர்கள் இதனை தடுக்க முன்வர வேண்டும்.

Story first published: Friday, September 30, 2022, 16:43 [IST]
Other articles published on Sep 30, 2022
English summary
Harsha Bhogle slams England cricket over mankad controversy for targeting deepti sharmaஎன்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?நீங்க வச்சது தான் சட்டமா? இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய ஹர்ஸா போக்லே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X