இந்தியாவுக்கு விபூதி அடித்த அயர்லாந்து.. ஷாக் ஆகி நின்ற இந்திய வீரர்கள்.. உண்மையை ஒப்புகொண்ட ஹர்சல்

டுபிளின்: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அயர்லாந்து அணியின் பேட்டிங் அசத்தலாக இருந்தது.

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி எப்படியும் 120 ரன்களில் சுருண்டுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்புயாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றம்.. சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு

ஆனால் அயர்லாந்து வீரர்கள் இந்தியாவுக்கே டஃப் கொடுத்து 11 சிக்சர்கள், 21 பவுண்டரிகளை விளாசி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

பேட்டிங்கிற்கு சாதகம்

பேட்டிங்கிற்கு சாதகம்

கொஞ்சம் தவறி இருந்தாலும், அயர்லாந்து அணி, இந்தியாவுக்கு விபூதி அடித்திருக்கும். இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்சல் பட்டேல், 225 ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். பெரும்பாலான நேரங்களில் இந்த இலக்கை வெற்றிக்கரமாக தடுப்போம். ஆனால் அயர்லாந்து அணி பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது.

தவறுகளை செய்தோம்

தவறுகளை செய்தோம்

ஆடுகளத்தின் பவுண்டரி லைன்களில் பந்து மின்னல் வேகத்தில் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் சில தவறுகளை போட்டியில் செய்தோம். அதனால் தான் அயர்லாந்து அணி இவ்வளவு அருகாமைக்கு வந்தனர். ஆனால் நாங்கள் பதற்றம் அடையாமல், கடைசியில் வெற்றி பெற்றோம். இன்றைய ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக இருந்தது.

ஆச்சரியமாக இருந்தது

ஆச்சரியமாக இருந்தது

அயர்லாந்து அணி வீரர்கள் இப்படி பேட்டிங் திறனை வெளிப்படுத்துவார்கள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அயர்லாந்து பேட்டிங்கின் தரத்தை இனி யாரும் கேள்வியே கேட்க முடியாது. உலகத்திற்கு அவர்களது திறமையை காண்பித்துவிட்டார்கள். தோல்வி குறித்து பேசிய அயர்லாந்து கேப்டன் பால்பெர்னி, இவ்வளவு அருகில் வந்து தோற்றது மனதை நொறுக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

கசப்பு மருந்து

கசப்பு மருந்து

இந்த தோல்வி ஒரு கசப்பு மருந்து போல் உள்ளது. எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. தற்போது நாங்கள் ஏமாற்றத்துடன் தான் இருக்கிறோம். இருப்பினும் அடுத்தது நியூசிலாந்துடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறோம். உலகக் கோப்பை தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Harshal patel lauds Ireland batting that he was surprised of big hitting இந்தியாவுக்கு விபூதி அடித்த அயர்லாந்து.. ஷாக் ஆகி நின்ற இந்திய வீரர்கள்.. உண்மையை ஒப்புகொண்ட ஹர்சல்
Story first published: Wednesday, June 29, 2022, 15:01 [IST]
Other articles published on Jun 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X