For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா இல்லை என்றாலும் கவலை வேண்டாம்.. ஹர்சல் பட்டேலின் 20வது ஓவரை கவனத்தீர்களா ?

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா காயம் காரணமாக டி20 உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறினாலும் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை.

ஏனென்றால் இந்திய அணி பும்ராவை நம்பி மட்டும் உலகக்கோப்பை தொடரில் களம் இறங்கவில்லை.சொல்லப்போனால் பும்ரா இல்லாமல் இந்திய அணி பல முக்கிய போட்டிகளை வென்று இருக்கிறது.

ஆசிய கோப்பை போட்டியில் கூட புவனேஸ்வர் குமார் 19 ஆவது ஓவரில் சொதப்பியதால் மட்டுமே இந்திய அணி தோல்வியை தழுவியது.இந்த நிலையில் காயம் அடைந்து இரண்டு மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஹர்சல் பட்டேல் தற்போது மெதுவாக பார்முக்கு திரும்பி வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா விலகியது நல்லது தான்.. கடைசி நேரத்தில் உஷாரான பிசிசிஐ.. உண்மையில் என்ன நடந்தது?? ஜஸ்பிரித் பும்ரா விலகியது நல்லது தான்.. கடைசி நேரத்தில் உஷாரான பிசிசிஐ.. உண்மையில் என்ன நடந்தது??

அனுபவம்

அனுபவம்

ஹர்சல் பட்டேல் யாக்கர்கள் மற்றும் வேகம் குறைவாக பந்து வீசி எதிரணி விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லவர். ஐபிஎல் 2021 சீசனில் ஹர்சல் பட்டேல் 32 விக்கெட் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றிருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய முதல் சர்வதேச டி20 போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட் வீழ்த்தி ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது வென்றார்.

ரோகித் அளித்த நம்பிக்கை

ரோகித் அளித்த நம்பிக்கை

இந்த நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ஹர்சல் பட்டேல் தற்போது திரும்பி மெல்ல மெல்ல பார்ம்க்கு வருகிறார். முதலில் ரன்களை வாரி வழங்கினாலும் தற்போது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஹர்சல் பட்டேல் குறித்து பேசிய ரோஹித் சர்மா அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்திருப்பதால் அவருக்கு முழு ஆதரவை நாங்கள் வழங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆஸிக்கு எதிரான கடைசி ஓவர்

ஆஸிக்கு எதிரான கடைசி ஓவர்

தற்போது ரோகித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கடைசி இரண்டு போட்டியில் ஹர்சல் பட்டேல் இருபதாவது ஓவரில் குறைவான ரன்களை மட்டுமே கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 20-வது ஒவரில் ஹர்சல் பட்டேல் வெறும் ஏழு ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா ஆட்டம்

தென்னாப்பிரிக்கா ஆட்டம்

இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவரை வீசி உள்ள ஹர்சல் பட்டேல் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் ஹர்சல் பட்டேல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி இரண்டு டி20 போட்டி மற்றும் டி20 உலக கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டம் என அனைத்து போட்டியிலும் விளையாடி அவரது பழைய பார்மை மீட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாதது நிச்சயம் என்று அணிக்கு பின்னடைவு தான் என்றாலும், அதற்காக நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது அல்லவா? நம்பிக்கையுடன் காத்திருப்போம் அதுதானே எல்லாம்.

Story first published: Friday, September 30, 2022, 10:37 [IST]
Other articles published on Sep 30, 2022
English summary
Harshal patel might Plays a bumarh role in indian team for t20 world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X