For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வு பெறுங்கள்.. கோலி கொடுத்த மறைமுக அழுத்தம்.. தோனியின் ரிட்டயர் வதந்திக்கு பின் திக் பின்னணி!

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி குறித்து கேப்டன் கோலி ஏன் டிவிட் செய்தார், அதன் பின்னணி என்ன என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

Recommended Video

Watch Video : Kohli explains on dhoni's retirement

சென்னை: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி குறித்து கேப்டன் கோலி ஏன் டிவிட் செய்தார், அதன் பின்னணி என்ன என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் தோனி எப்படியும் ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தோனி இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. எப்போது ஓய்வு பெற போகிறேன் என்று தோனி இதுவரை எதுவும் சொல்லவில்லை.

அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்?அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்?

என்ன வைரல்

என்ன வைரல்

இந்த நிலையில்தான் கடந்த வாரம் தோனி ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் வந்தது. தோனி செய்தியாளர்களை சந்திக்கிறார். அவர் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்கள்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் அன்று மாலையே இந்திய அணியின் தேர்வு வாரியம் இந்த செய்தியை மறுத்தது. அதேபோல் தோனியின் மனைவியும் தோனியின் ஓய்வு செய்தியை மறுத்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு எல்லாம் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்றால் கண்டிப்பாக அது கேப்டன் கோலியின் டிவிட்டாகத்தான் இருக்கும். ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதிய 2016 டி 20 போட்டியை நினைவு கூர்ந்து கோலி டிவிட் செய்து இருந்தார்.

என்ன டிவிட்

என்ன டிவிட்

கோலி தனது டிவிட்டில், நான் அந்த போட்டியை மறக்கவே மாட்டேன். ஸ்பெஷல் இரவு. இந்த மனிதர், என்னை எதோ பிட்னஸ் டெஸ்டில் ஓட வைப்பது போல ஓட வைத்தார், என்று குறிப்பிட்டார். இந்த டிவிட்தான் தோனி ஓய்வு பெற போகிறார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டது.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இந்த நிலையில் இதுகுறித்து கோலி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னுடைய மனதில் இந்த டிவிட்டை செய்த போது எதுவுமே ஓடவில்லை. நான் சாதாரணமாக இதை போஸ்ட் செய்தேன். ஆனால் அது செய்தியாகிவிட்டது. இது எனக்கு நல்ல பாடம்.

பாடமும்

பாடமும்

நான் நினைப்பது போல உலகமும் நினைக்கும் என்று அர்த்தம் கிடையாது. எல்லோரும் அப்படி நினைப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. நான் உள்மனதில் எதையும் வைத்து இதை டிவிட் செய்யவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் அது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டது, என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சில கேள்விகள்

ஆனால் சில கேள்விகள்

ஆனால் தற்போதும் கோலியின் டிவிட் குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தோனி ஓய்வு குறித்து வதந்தி பரப்ப வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே கோலி அப்படி செய்துள்ளார். தோனியிடம் நேரடியாக ஓய்வு பெறுங்கள் என்று கூற முடியாது. அதனால் இப்படி மறைமுகமாக கோலி டிவிட் செய்து தோனிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என்று தோனி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, September 17, 2019, 14:08 [IST]
Other articles published on Sep 17, 2019
English summary
Has Skipper Kohli posted purposely on Dhoni, which creates rumor on Thala retirement?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X