For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியை சாய்க்க தயாராக இருக்கும் ஆம்லா..!! உலக கோப்பை தொடரில் நிச்சயமாக நடக்குமா?

லண்டன்: 77 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை தென் ஆப்ரிக்கா வீரர் ஆம்லா முறியடித்துவிடுவார்.

உலக கோப்பை தொடர் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரோகித் சர்மா, பட்லர், வார்னர், டி காக், ஷாய் ஹோப் என பல சிறந்த வீரர்கள் களத்தில் இருக்கின்றனர்.

இந்திய கேப்டன் கோலி, மிகச் சிறந்த வீரராக உலக கோப்பையில் வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் சாதனையை முறியடித்து வருபவர் அவர் மட்டும் தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், பாண்டிங்கிற்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கிறார் கோலி. அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 8,000 ரன்கள் குவித்த வீரராக கோலி தான் இதுவரை இருக்கிறார். 175 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை எட்டி இருக்கிறார்.

சாதனைக்காக காத்திருப்பு

சாதனைக்காக காத்திருப்பு

தற்போது அந்த சாதனையை முறியடிக்க ஒருவர் காத்திருக்கிறார். அவர் தான் தென் ஆப்ரிக்க தொடக்க வீரர் ஆம்லா. அவர் இன்னும் 77 ரன்கள் அடித்தால் 8000 ரன்களை எட்டிவிடுவார். 172 இன்னிங்ஸ்களில் 7923 ரன்களை ஆம்லா அடித்துள்ளார்.

கை கொடுக்க வாய்ப்பு

கை கொடுக்க வாய்ப்பு

கோலியின் சாதனையை முறியடிக்க உலக கோப்பை தொடர் ஆம்லாவுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏதாவது ஒரு போட்டியிலோ அல்லது அதற்கு அடுத்த போட்டிகளிலோ இந்த ரன்களை அவர் எட்டக்கூடும் என்று தெரிகிறது.

பாதியில் வெளியேற்றம்

பாதியில் வெளியேற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆம்லா, ஆர்ச்சரின் பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடிவாங்கி பாதியில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆம்லா ஆடவில்லை. ஆனாலும் இன்னும் 2 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை முறியடித்து விடுவார். எனவே, அவருக்கு இன்னும் சாதனை நிகழ்த்த வாய்ப்புகள் இருக்கின்றன.

ரம்ஜான் நோன்பு

ரம்ஜான் நோன்பு

தற்போது ரம்ஜான் என்பதால், ஆம்லா சூரிய உதயத்தில் இருந்து சூரிய மறைவு வரை நோன்பு கடைபிடித்து வருகிறார். நோன்பு இருப்பது தனக்கு உடல் அளவிலும், மனதளவிலும் உதவுவதாக அவர் கூறியிருக்கிறார்.

பிடித்தமான பயிற்சி

பிடித்தமான பயிற்சி

இதுகுறித்து ஆம்லா தெரிவித்ததாவது: ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடை பிடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நோன்பை நான் மனதிற்கு நல்ல பயிற்சியாக பார்க்கிறேன். உடல் அளவிலும் சிறப்படைய உதவுகிறது என்றார்.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

2012ம் ஆண்டு ரம்ஜான் நோன்பு கடைபிடித்த வேளையில், இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில், ஆம்லா, தென் ஆப்ரிக்க அணிக்காக 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே, அவர் இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, June 2, 2019, 15:57 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
Hashim amla is going to break kohlis record in this world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X