ஒரு சிக்ஸ் கூட அடிக்கல.. நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம்.. இளம் வீரரை விளாசிய சேவாக்.. பொளேர்

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் கேகேஆர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வார்னர் வரை ரீச் ஆன வாத்தி கம்மிங்.. ஹைதராபாத் டீம் வெளியிட்ட வீடியோ.. விஜய் பேன்ஸுக்கு சர்ப்ரைஸ்வார்னர் வரை ரீச் ஆன வாத்தி கம்மிங்.. ஹைதராபாத் டீம் வெளியிட்ட வீடியோ.. விஜய் பேன்ஸுக்கு சர்ப்ரைஸ்

கேகேஆரின் 188 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய எஸ்ஆர்ச் அணியால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

3வது போட்டி

3வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கேகேஆர் அணி சிறப்பான பேட்டிங்கை அளித்து 188 ரன்களை எஸ்ஆர்எச் அணிக்கு இலக்காக அளித்தது.

மணீஷ் பாண்டே சிறப்பு

மணீஷ் பாண்டே சிறப்பு

தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மணீஷ் பாண்டே 3வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய போதிலும் டெத் ஓவர்களில் அவரால் சோபிக்க முடியவில்லை. இறுதி 6 ஓவர்களில் அவரால் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இறுதி பந்தில் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார்.

எஸ்ஆர்எச் தோல்வி

எஸ்ஆர்எச் தோல்வி

41 பந்துகளை விளையாடி 61 ரன்களை பாண்டே அடித்த போதிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்களில் கேகேஆரிடம் தோற்றது. இந்நிலையில் இந்த சொற்ப ரன்களில் எஸ்ஆர்எச் தோல்வி அடைந்திருக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.

திணறலான ஆட்டம்

திணறலான ஆட்டம்

ஜானி பேர்ஸ்டோவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பாண்டே விளையாடிய நிலையில், அவர் அவுட்டானவுடன் நெருக்கடியை பாண்டே சந்திக்க துவங்கிவிட்டார். அவரது ஆட்டம் திணறலை சந்திக்க துவங்கி விட்டது. இதனிடையே அவர் சிறப்பாக விளையாடிய போதிலும் அவர் அடித்து ஆடுவதற்கு பந்து கிடைக்காமல் அவர் திணறியதாக ஷேவாக் குறிப்பிட்டுள்ளர்.

10 ரன்களில் தோற்றிருக்காது

10 ரன்களில் தோற்றிருக்காது

அவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்றும் முன்னதாகவே நெருக்கடியை சந்தித்து அவர் ஸ்டெடியானதாகவும் ஷேவாக் குறிப்பிட்டார். அவர் சில பவுண்டரிகளை அடிக்க வழிவகை செய்திருந்தால் 10 ரன்களில் எஸ்ஆர்எச் தோற்றிருக்காது என்றும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Had Pandey taken the initiative to smash a few boundaries, SRH wouldn’t have lost the game by 10 runs -Sehwag
Story first published: Monday, April 12, 2021, 15:40 [IST]
Other articles published on Apr 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X