For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கடும் தண்டனை வழங்கிய ஐ.சி.சி.!! அவ்வளவு தான் போச்சு..!!

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் டேவிட் மாலன், ஜோ ரூட் கடுமையாக போராடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பினர்

இவங்க தான் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..!! ஆஸி. வீரர் வார்னே கருத்துஇவங்க தான் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..!! ஆஸி. வீரர் வார்னே கருத்து

100% அபராதம்

100% அபராதம்

இதனால் கடும் அதிருப்தியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் உள்ளார். இந்த நிலையில், ஐ.சி.சி.யின் அறிவிப்பு இங்கிலாந்துக்கு தலையில் இடி விழுந்தது போல் அமைந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக ஓவர் வீச எடுத்து கொண்டதாக கூறி, இங்கிலாந்து வீரர்களின் ஊதியம் 100 சதவீதத்தையும் ஐ.சி.சி. அபாரதமாக விதித்துள்ளது.

ஐ.சி.சி. அதிரடி

ஐ.சி.சி. அதிரடி

மேலும் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து பெற்ற புள்ளிகளிலிருந்து மேலும் 5 புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா தொடரில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது இங்கிலாந்து 7 புள்ளிகளை பறி கொடுத்தது.

பறிப்போகும் வாய்ப்பு

பறிப்போகும் வாய்ப்பு

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இது போல் குறைக்கப்படும் புள்ளிகளால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஐ.சி.சி நடவடிக்கை ஜோ ரூட்டை கடுப்படைய செய்துள்ளது.இதே போன்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹேட் அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறி, அவருக்கு ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Mukesh Ambaniக்கு Cricket Media Rights? ICC எடுத்த முடிவு | OneIndia Tamil
புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

இதனிடையே, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை தொடர்ந்து முதலிடத்திலும் பாகிஸ்தான் 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள்5 வது இடத்திலும், இங்கிலாந்து 6வது இடத்திலும்,நியூசிலாந்து 7வது இடத்திலும் உள்ளன.

Story first published: Saturday, December 11, 2021, 19:46 [IST]
Other articles published on Dec 11, 2021
English summary
ICC Punished England team heavily for the slow over rate.Match referee David Boon has also penalized England 100% of their match fee for falling five overs short of the targets after adjusting for time allowances.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X