For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லெஜண்ட்ஸ் லீக்கில் தோனி ஏன் இல்லை.. ஓய்வு பெற்றும் அனுமதி இல்லை.. காரணம் இது தான்

மும்பை : ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் போல் தற்போது லெஜென்ட்ஸ் கிரிக்கெட்டின் என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு தொடர்கள் நடைபெறுகிறது.

இதில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பல நாடுகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக சச்சின், ஷேவாக், யுவராஜ் ரெய்னா உள்ளிட்ட இந்திய வீரர்களும், பிரைன் லாரா ,வாட்சன் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பலரும் லெஜென்ட்ஸ் தொடரில் பங்கேற்கின்றனர்.

ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.. போலீசாரின் தடியடி தாக்குதல்.. ஐதராபாத் வாரியம் மீது அதிரடி நடவடிக்கை ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.. போலீசாரின் தடியடி தாக்குதல்.. ஐதராபாத் வாரியம் மீது அதிரடி நடவடிக்கை

தோனி ஏன் இல்லை

தோனி ஏன் இல்லை

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஏன் எந்த லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை என்று ரசிகர்கள் சந்தேகத்து வருகின்றனர். இதை போன்று தோனி ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அல்லது மென்டராக பணிபுரிய வாய்ப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

பிசிசிஐ விதி

பிசிசிஐ விதி

ஆனால் அதிலும் தோனி தன்னை தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இதற்கு காரணம் பிசிசிஐயின் ஒரு விதி தான் என்று கூறப்படுகிறது. அதாவது சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டும் போதாது, பிசிசிஐ தொடர்புடைய அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே லெஜண்ட்ஸ் தொடர்களில் பங்கேற்கலாம்.

ரெய்னா முடிவுக்கு காரணம்

ரெய்னா முடிவுக்கு காரணம்

இதன் காரணமாகத்தான் சுரேஷ் ரெய்னா, உத்தப்பா போன்ற வீரர்கள், திடீரென இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தி ஹண்டரட், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக் பேஷ் தொடர் , துபாயில் நடைபெறும் எமிரேட்ஸ் டி20 தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக தகுதி பெற்றுள்ளனர்.

தோனி ஓய்வு எப்போது?

தோனி ஓய்வு எப்போது?

ஆனால் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருக்கிறார். அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாட விட்டு அவரும் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 23, 2022, 16:00 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
Here is the Reason for Why MS Dhoni is not playing in Legends game and SAT20 லெஜண்ட்ஸ் லீக்கில் தோனி ஏன் இல்லை.. ஓய்வு பெற்றும் அனுமதி இல்லை.. காரணம் இது தான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X