For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா vs போல்ட் - எதிர்ல யார் நின்னாலும் அடி உறுதி.. கலங்கும் பேட்ஸ்மேன்கள்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பும்ரா மற்றும் போல்ட் இடையேயான மோதலுக்கு தான் மற்ற காம்போ மோதல்களை விட வேல்யூ அதிகம். ஏனெனில், செய்கை அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

வரும் ஜூன் 18ம் தேதி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்க விராட் கோலி தலைமையிலான அணி தயாராகி வருகிறது.

இருந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு..நிம்மதி பெருமூச்சு விடும் அஸ்வின், ஜடேஜா..கவாஸ்கர் கூறிய நற்செய்திஇருந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு..நிம்மதி பெருமூச்சு விடும் அஸ்வின், ஜடேஜா..கவாஸ்கர் கூறிய நற்செய்தி

இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் ஓரளவு வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்த நிலையில், வலைப்பயிற்சியில் அவர்கள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்நிய மண்

அந்நிய மண்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய பவுலிங் யூனிட்டில் இஷாந்த் ஷர்மா சீனியராக இருந்தாலும், லீட் பண்ணப் போவது பும்ரா தான். உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவராக, இந்த சிறிய வயதுக்குள் முன்னேறிவிட்டார். யார்க்கர்ஸ் இவரது பலம். ஆனால், இப்போது போர் நடப்பதோ இங்கிலாந்தில். நியூசிலாந்துக்கு இங்கிலாந்து அந்நிய மண் என்றாலும், அவர்கள் நாட்டைப் போன்ற கண்டிஷன் தான் இங்கேயும். அதனால் தான், சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே வைத்து ஊதித்தள்ள முடிந்தது.

கன்னத்துக்கு அருகில்

கன்னத்துக்கு அருகில்

அப்படிப்பட்ட பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை தகர்க்கும் வல்லமை பும்ராவுக்கு உள்ளது. Uniqueness தான் இவரது பலம். உலகில் வேறு எந்த பவுலரும் பின்பற்றாத ஸ்டைல் இவருடையது. ஷார்ட் ரன் அப், Sling ஆர்ம் ஆக்ஷன் ஆகியவை தான் ஒரு பேட்ஸ்மேன் இவரை விளாசுவதில் இருந்து தடுக்கிறது. பெரும்பாலான பவுலர்கள், ஓடி வந்து பந்து வீச குதிக்கும் போது, பந்தை கன்னத்துக்கு அருகில் வைத்து தான் வீசுவார்கள். இதனை பேட்ஸ்மேன்கள் ரீட் செய்வது எளிது.

அசுரத்தனமான இன்-ஸ்விங்

அசுரத்தனமான இன்-ஸ்விங்

ஆனால், பொறுமையாக ஓடி வரும் பும்ரா, பந்தை நெஞ்சுப் பகுதியில் வைத்து ஓடி வந்து, கையை உடலுக்கு பின் கொண்டுச் சென்று வீசுவார். இங்கு தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். கணிக்க முடியாது. இதனால் தான் அவரால் அதிகம் யார்க்கர்ஸ் போடவும் முடிகிறது. அதுவும் துல்லியமாக. அதேபோல், வலது கை வீரர்களுக்கு இவரால் அசுரத்தனமான இன்-ஸ்விங் பந்துகளையும் அதிகம் வீச முடியும். ஆனால், இவரது ஆக்ஷனில் உள்ள பெரிய குறை என்னவெனில், காயம் தான். அடிக்கடி இவர் காயத்தில் சிக்க நேரிடும். எனினும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இவரது பவுலிங் நிச்சயம் குடைச்சல் கொடுக்கும் என்பது உறுதி.

நேர்த்தியான ஜம்ப்

நேர்த்தியான ஜம்ப்

அதேபோல், டிரெண்ட் போல்ட். வேகமான ரன்னிங் இவரது முதல் ப்ளஸ். குறிப்பாக இவரது ஜம்ப் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அந்த ஜம்ப்பில் தான் பந்தை எங்கு லேண்ட் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார். அதேசமயம், ஜம்ப்பை குறைத்து கால்களை பேட்ஸ்மேனுக்கு நேராக நீட்டி வீசவும் இவருக்கு தெரியும். இவரது பவுலிங் ஆக்ஷனுக்கு இன்ஸ்பைரிங் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். இவரது பவுலிங் முறை அதிக காயங்களுக்கு வழிவகுக்காது என்பது கூடுதல் பிளஸ். உள்ளூர் போட்டிகள் தொடங்கி, சர்வதேச கிரிக்கெட் வரை பவுல் செய்த வீரர்களில், தனது பவுலிங் முறையை மாற்றாத வெகுசில வீரர்களில் பும்ராவும் ஒருவர்.

முதல் இலக்கு

முதல் இலக்கு

பெரியளவில் இவரது பவுலிங்கில் ரிஸ்க் இருப்பது போன்று தெரியாது. பார்க்கவே கிளாஸிக்காக இருக்கும். இவர் பெரிய உயரமும் கிடையாது. 5'11 தான். ஆனால், பேட்ஸ்மேன்களுக்கு இரு வித ஸ்விங்கையும் வீசக்கூடிய திறன் படைத்தவர். புதிய பந்தில், ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு இன்-ஸ்விங் வீசுவது இவருக்கு அல்வா சாப்பிடுவது போன்று. ஸோ, கால்களை அதிகம் நகர்த்தாத ரோஹித் ஷர்மா தான் இரு இன்னிங்ஸிலும் இவரது முதல் இலக்காக இருக்கலாம். ஒருவேளை இரு இன்னிங்ஸிலும் ரோஹித் தப்பித்துவிட்டால், அதனை கிரிக்கெட் அதிசயத்தில் ஒன்றாக குறிப்பிடலாம். ஒட்டுமொத்தமாக, பும்ரா, போல்ட் பவுலிங் ரசிகர்களுக்கு செம தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, June 16, 2021, 19:34 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
analysis of bumrah vs boult ahead of wtc final 2021 - பும்ரா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X