For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி - ஆண்டர்சன் "வார்த்தைப் போர்".. விடாமல் போட்டிப் போட்டு "பதிலடி" - வெளியான முழு வீடியோ

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், கோலி - ஆண்டர்சன் இடையே நடந்த வார்த்தை மோதல் முழு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

ஏறக்குறைய தோல்வி என்று உறுதி செய்யப்பட்ட இந்திய அணி, ஒரேயொரு விஷயத்தால் கம்பேக் கொடுத்து மெகா வெற்றிப் பெற்றது.

 சரித்திர வெற்றி.. லார்ட்ஸ் டிரெஸ்ஸிங் ரூமில் கொண்டாடிய கோலி ஆர்மி - வீடியோ சரித்திர வெற்றி.. லார்ட்ஸ் டிரெஸ்ஸிங் ரூமில் கொண்டாடிய கோலி ஆர்மி - வீடியோ

 4 மணி நேரம்

4 மணி நேரம்

லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். எனினும், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா களத்தில் இருந்தனர்.

 முன்னிலை

முன்னிலை

பிறகு கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது.

Recommended Video

Ind vs Eng Virat Kohli கோபம் அடைந்தால் இப்படிதான் ஆகும் | Oneindia Tamil
 திசை மாறிய ஆட்டம்

திசை மாறிய ஆட்டம்

ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், ஒரேயொரு விஷயம் தான். பும்ராவை கார்னர் செய்து இங்கிலாந்து வீரர்கள் அட்டாக் செய்தனர். வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பவுன்சர்களை போட்டு தாக்கினர். அவர்கள் இப்படி பும்ராவை கட்டம் கட்டியதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக வீசினார். இதில், ஆண்டர்சனுக்கு தோள்பட்டை, நெஞ்சுப் பகுதியில் ஆங்காங்கே அடியும் பட்டது. இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே பும்ராவை நோக்கி சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வார்த்தைகளை வீசினார். இந்த மோதல், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது. கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, "பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உங்கள் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க" என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு, பும்ரா களமிறங்கிய போது, இங்கிலாந்து ரொம்பவே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பேட்ஸ்மேனுக்கு ஃபீல்ட் செட் செய்வதை விட, பும்ராவுக்கு கடுமையான ஃபீல்ட் செட் செய்தனர். பவுன்சர் பந்துகளை தொடர்ந்து வீசினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ராவின் ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இந்த பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

வெளியான வீடியோ

பலமாக தாக்கிய அந்த பந்து காரணமாக, பும்ரா ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆட்டம் அப்படியே திசை மாறியது. பும்ராவும் - ஷமியும் மிக நேர்த்தியாக விளையாடினார்கள். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஒருக்கட்டத்தில் இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 'இந்த ஸ்கோர் போதும்' என இந்தியா டிக்ளேர் செய்யும் அளவுக்கு இருவரும் அட்டகாசமாக பேட்டிங் செய்து இங்கிலாந்து பவுலர்களை திணற வைத்தனர். அவர்கள் வைத்த பொறியில் அவர்களே சிக்க, இங்கிலாந்து மீடியாக்கள் அந்த அணியை விட்டு விளாசிக் கொண்டிருக்கின்றன. ஓவர் மிதப்பால் இங்கிலாந்து, இந்திய பவுலர்களிடம் அடி வாங்கியிருக்கிறது என்று ஒருசேர இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை விமர்சித்துள்ளன. மேலும், கோலி கூறியது போல், லார்ட்ஸ் ஒன்னும் உங்கள் வீட்டின் கொல்லைப்புறம் அல்ல என்று இங்கிலாந்து ஊடகங்கள் மிகக் கடுமையாக எழுதியுள்ளன. இந்நிலையில், கோலி - ஆண்டர்சன் வார்த்தைகளால் மோதிக் கொண்ட முழு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே!

Story first published: Thursday, August 19, 2021, 19:12 [IST]
Other articles published on Aug 19, 2021
English summary
sledging between Kohli, Anderson at Lord's full video - கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X