For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவரில்.. ஒட்டுமொத்த கணிப்பை உடைத்தெறிந்த ஸ்டார்க்.. உறைந்து நின்ற "காட்டடி" ரஸல் (வீடியோ)

செயின்ட் லூசியா: உலகின் மெகா அதிரடி மன்னன்களில் ஒருவரான ஆந்த்ரே ரஸலுக்கு, 'நான் யார்-னு கேட்டுப்பாரு தம்பி' என்று புரிய வைத்திருக்கிறார் மிட்சல் ஸ்டார்க்.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், நேற்று 4வது போட்டி செம ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமைந்தது.

8 மணி நேரமாக ஏர்போர்ட்டில்.. படாதபாடு பட்ட இந்திய அணி.. அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர்8 மணி நேரமாக ஏர்போர்ட்டில்.. படாதபாடு பட்ட இந்திய அணி.. அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர்

 களமிறங்கிய வெ.இ.,

களமிறங்கிய வெ.இ.,

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதில், 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 190 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

 நான்கு சிக்ஸர்கள்

நான்கு சிக்ஸர்கள்

தொடக்க வீரர் சிம்மன்ஸ் 48 பந்துகளில் 72 ரன்கள் விளாச, எவின் லெவிஸ் 31 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியின் ஹீரோ கெயில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் 19வது ஓவரை ரிலே மெரிடித் வீசினார். இதில், மொத்தம் நான்கு சிக்ஸர்கள் பறந்தன. ரஸல் ஒரு சிக்ஸ் அடிக்க, ஃபேபியன் ஆலன் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசி, கடைசி பந்தில் அவுட்டானார்.

 கிடைத்ததோ 6 ரன்கள்

கிடைத்ததோ 6 ரன்கள்

அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 24 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்களே தேவைப்பட்டது. களத்தில் ரஸல் இருந்ததால், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணிக்கு 148 கி.மீ.வேகத்தில் வீசிய ஸ்டார்க், முதல் நான்கு பந்துகளை டாட் பால் ஆக்கி அசர வைத்தார். அப்போது கூட கடைசி இரு பந்தில் சிக்ஸர் அடிக்கலாம் என்று நினைத்த ரஸல், ஓவர் கான்ஃபிடண்ட்டில் இருக்க, 5வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடிக்க, மொத்தம் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது.

அடுத்தடுத்து யார்க்கர்ஸ்

இதன் மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது. ரஸல் ஒரு மெகா அதிரடி சூரர் வீரர் என்பது தெரியாத நபர்களே இருக்க முடியாது. ஐபிஎல் போட்டிகளில் அவர் காட்டிய அதகளங்கள் எக்கச்சக்கம். அப்படிப்பட்ட ஒரு சூரனை கடைசி ஓவரில், வெற்றிக்கு தேவையான வெறும் 11 ரன்களை அடிக்கவிடாமல் நாஸ்தி செய்திருக்கிறார் ஸ்டார்க். கடைசி ஓவரில், வரிசையாக முதல் நான்கு பந்துகளில் யார்க்கர்களை சொருவி, ரஸலால் ஒன்றுமே செய்ய முடியாதபடி திண்டாட வைத்துவிட்டார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Story first published: Thursday, July 15, 2021, 15:55 [IST]
Other articles published on Jul 15, 2021
English summary
here watch how mitchell starc stopped russell - ஸ்டார்க்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X