For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட்டர்.. வார்னேவின் "வசந்த" மாளிகை.. இப்போ அவர் கையில்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட்டர் யார் தெரியுமா? வாங்க இந்த செய்தியில் அவரை சந்திக்கலாம்.

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமை.. மங்களகரமாக தொடங்கும் ஐபிஎல்? - பரிதாப நிலையில் வெள்ளிக்கிழமை.. மங்களகரமாக தொடங்கும் ஐபிஎல்? - பரிதாப நிலையில்

அதன்படி, உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

180 மில்லியன் டாலர்

180 மில்லியன் டாலர்

2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்தார் McGregor. இரண்டாம் இடத்தை பிடித்தது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

எனும், கிரிக்கெட்டில் யார் டாப் என்பதை அறியவே நமது ரசிகர்கள் விரும்புவார்கள். இதில், முதல் இடத்தில் இருப்பது சச்சின் டெண்டுல்கர். Sportingfree.comன் அறிக்கையின் படி, சச்சின் தான் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர். இவரின் சொத்து மதிப்பு ரூ.1090 கோடி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் பல பிராண்ட்கள் மூலமும், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார்.

ரூ.767 கோடி

ரூ.767 கோடி

அதேபோல், உலகின் 2வது பணக்கார கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் 'தல' தோனி. இவரது சொத்து மதிப்பு ரூ.767 கோடி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டாலும், சென்ற ஆண்டு தான் சர்வதேச லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டிலும் இருந்து தோனி ஓய்வு பெற்றார்.

நம்பர் 3

நம்பர் 3

உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரர் நம்ம கேப்டன் விராட் கோலி. இவரது சொத்து மதிப்பு ரூ.638 கோடி. இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக இருக்கும் கோலிக்கு சொந்தமாக 'Wrogn' எனும் பேஷன் பிராண்டு நிறுவனம் உள்ளது. அதேபோல், Puma-வுடன் இணைந்து One8 எனும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

500 கோடி சொத்து

500 கோடி சொத்து

அதேபோல், உலகின் நான்காவது பணக்கார கிரிக்கெட் வீரராக இருப்பவர் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமானவராக திகழ்கிறார். 2012ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பாண்டிங்கின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், லெஜன்ட்ரி ஸ்பின்னருமான ஷேன் வார்னேவுக்கு சொந்தமான 'Brighton Mansion'-எனும் சகல வசதியும் நிறைந்த மெகா பங்களாவை வாங்கியிருப்பது பாண்டிங் தான்.

Story first published: Monday, May 31, 2021, 21:19 [IST]
Other articles published on May 31, 2021
English summary
here meet the richest australian cricketer - ரிக்கி பாண்டிங்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X