For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு

Recommended Video

Gibbs Reveals Calling Pakistan Supporters as 'Animals'

கேப் டவுன் : கடந்த 2007ல் பாகிஸ்தான் ரசிகர்களை விலங்குகள் என திட்டி அதற்காக ஐசிசி-யால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தடை பெற்றிருந்தார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ்.

தான் அவ்வாறு நடந்து கொண்டததற்கான காரணம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்த கிப்ஸ், அந்த ரவுடி பாகிஸ்தான் ரசிகர்கள், தன்னுடைய மகன் மற்றும் மனைவியை அவர்களது இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டதால் தான் அவ்வாறு திட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களை கிப்ஸ் திட்டியது அங்கிருந்த ஸ்டெம்ப் மைக்ரோபோனில் பதிவாகியது. இதையடுத்து அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்திருந்தது.

14 ஆண்டுகள் கிரிக்கெட்

14 ஆண்டுகள் கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் கடந்த 1996 முதல் 2010 வரையில் அனைத்து வகையான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

சொந்த மண்ணில் போட்டி

சொந்த மண்ணில் போட்டி

இந்நிலையில் கடந்த 2007ல் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் ரசிகர்களை குரூரமான விலங்குகள் என்று தரக்குறைவாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களை குரூரமான விலங்குகள் என கிப்ஸ் திட்டியது ஸ்டெம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோபோனில் பதிவானது. இதையடுத்து அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது.

டிவிட்டரில் பதிலளித்த கிப்ஸ்

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹெர்ஷல் கிப்ஸ், தன்னுடைய மனைவி மற்றும் மகனை இருக்கையில் இருந்து ரவுடித்தனமாக பாகிஸ்தான் ரசிகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தான் கோபமடைந்து அந்த வார்த்தைகளை பிரயோகித்ததாக கூறியுள்ளார்.

டிவிட்டரை நிறையவிட்ட ரசிகர்கள்

டிவிட்டரை நிறையவிட்ட ரசிகர்கள்

இந்நிலையில், கிப்சின் இந்த பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதரவு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். உண்மையை கூறியதற்கு ஐசிசி எதற்கு தண்டனை அளித்தது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, January 22, 2020, 17:36 [IST]
Other articles published on Jan 22, 2020
English summary
Herschelle Gibbs Reveals Calling Pakistan Supporters "Animals"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X