For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

15 மடங்கு அதிக விலை கொடுத்து ஹெட்மயரை வாங்கிய டெல்லி கேபிடல்ஸ்

கட்டாக் : நேற்று நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் சிம்ரன் ஹெட்மயரை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.7.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஹெட்மயரின் அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், அவரை 15.5 மடங்கு அதிகமாக விலை கொடுத்து, டெல்லி கேபிடல்ஸ் கைவசப்படுத்தியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் ஏலத்தில் பாட் கமின்ஸ், க்ளென் மாக்ஸ்வெல் போன்ற வீரர்களை அடுத்து 6வதாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை ஹெட்மயருக்கு கிடைத்துள்ளது.

பந்துகளை விளாசிய ஹெட்மயர்

பந்துகளை விளாசிய ஹெட்மயர்

இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹெட்மயர் 139 ரன்களை குவித்து தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஹெட்மயரை வாங்க அணிகள் ஆர்வம்

ஹெட்மயரை வாங்க அணிகள் ஆர்வம்

இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் ஏலத்தில் சிறப்பான மூத்த வீரர்களை வாங்க அணிகள் ஆர்வம் காட்டியது போலவே இளம் திறமைகளையும் வாங்க ஆர்வம் காட்டின. இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்களை குவித்த ஹெட்மயரை வாங்கவும் கடுமையான போட்டி நிலவியது.

ரூ.7.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஹெட்மயர்

ரூ.7.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஹெட்மயர்

ஐபிஎல் ஏலத்தில் ஹெட்மயரை வாங்க அணிகளுக்குள் போட்டி நிலவிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி, 15.5 மடங்கு அதிக விலை கொடுத்து ரூ.7.75 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது.

கமின்ஸ், மாக்ஸ்வெல் வரிசையில் ஹெட்மயர்

கமின்ஸ், மாக்ஸ்வெல் வரிசையில் ஹெட்மயர்

ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக விலைகொடுத்து பாட் கமின்ஸ், க்ளென் மாக்ஸ்வெல் போன்ற வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில், 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக கொண்ட ஹெட்மயர் அதிகமாக விலை கொடுக்கப்பட்ட 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உற்சாக குத்து டான்ஸ் போட்ட ஹெட்மயர்

ஏலத்தில் ஹெட்மயரை எடுத்த டெல்லி கேபிடல்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வரவேற்பு கொடுத்து, பின்பு ரசிகர்களுக்கு அவரது மெசேஜ் குறித்து கேள்வி எழுப்பியது. இதையடுத்து ஒரு நிமிட இடைவெளியில் அவர் தனது மகிழ்ச்சியை குத்து டான்ஸ் போட்டு வெளிப்படுத்தினார்.

பிளே-ஆப் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ்

பிளே-ஆப் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ்

கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே-ஆப் சுற்றில் நுழைந்தது. ஆயினும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், ஐபிஎல் 2020யில் டைட்டிலை வெல்ல அந்த அணி அதிகமாக முதலீடு செய்து வருகிறது.

Story first published: Friday, December 20, 2019, 11:27 [IST]
Other articles published on Dec 20, 2019
English summary
Hetmyer's Funny dance after he bought by Delhi Capitals in IPL Auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X