For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு பந்து.. ஒரே ஒரு சிக்ஸர்.. செத்துப் போன ராஜஸ்தான் ராயல்ஸ்...!

மும்பை: கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட அந்தப் போட்டியின் முடிவை மாற்றி விடும் என்பார்கள்.. உண்மையான சத்தியமான வார்த்தை பாஸ்... அப்படிப்பட்ட ஒரு வரலாற்று முடிவைத்தான் நேற்று மும்பை வீரர்கள் கோரி ஆண்டர்சனும், தரேவும் படைத்து விட்டனர்.

இப்படி விளையாடும், இப்படி விளையாடினால்தான் பிளே ஆப் பிரிவுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ்.

இந்த நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வாழ்வா சாவா போட்டியில் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்றதோடு, பிளே ஆப் பிரிவுக்குள்ளும் நுழைந்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது மும்பை இந்தியன்ஸ்.

முதல் நாளில்தான் யூசுப் பதான் சூறாவளியைச் சந்தித்த ரசிகர்கள் நேற்று கோரி ஆண்டர்சன் ஆடிய ருத்ரதாண்டவத்தில் சிக்கி சந்தோஷத்தில் ஸ்தம்பித்துப் போனார்கள். வந்த பந்தையெல்லாம் அவர் பவுண்டரிளுக்கு விளாச வாங்கடே மைதானமே ஆடிக் குதித்தது.

ஸ்டன்னிங் சேசிங்

ஸ்டன்னிங் சேசிங்

ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்லாமல் டுவென்டி 20 கிரிக்கெட் வரலாற்றிலும் நேற்றைய ரன் விரட்டுப் போட்டி கலக்கி விட்டது... புதிய வரலாற்றை எழுதி விட்டது. கிட்டத்தட்ட மஞ்சு விரட்டு போல ஆட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை செமத்தியான விறுவிறுப்பு...

14.3 ஓவர்களுக்குள்

14.3 ஓவர்களுக்குள்

மும்பை அணி தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 190 ரன்களை 14.3 ஓவர்களில் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. அப்போதுதான் அது ராஜஸ்தான் ராயல்ஸை விட ரன் ரேட்டில் மேலே போய் பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெற முடியும். ஒரு பந்து மிஸ் ஆனால் கூட ராஜஸ்தான் உள்ளே போய் விடும், மும்பை வீட்டுக்குப் போக வேண்டிய நிலை.

கோரி ஆண்டர்சன் புண்ணியத்தால்

கோரி ஆண்டர்சன் புண்ணியத்தால்

ஆனால் இந்த வெற்றி இலக்கை கோரி ஆண்டர்சன் புண்ணியத்தாலும், ஆதித்யா தரேவின் மாஜிக் சிக்ஸராலும் எட்டி பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டது மும்பை.

கடைசிப் பந்தில் அபார சிக்ஸர்

கடைசிப் பந்தில் அபார சிக்ஸர்

14.3 ஓவர் வரை விரட்டு விரட்டு என்று விரட்டி வந்தது மும்பை இந்தியன்ஸ். 14.3 ஓவரின்போது இரு அணிகளின் ஸ்கோரும் சமமாகி விட்டன. இதனால் மும்பை பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. மும்பை வீர்ரகள் அதிர்ந்து ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

பால் வார்த்தை அம்பயர்கள்

பால் வார்த்தை அம்பயர்கள்

இந்த நிலையில்தான் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பை அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் என்று நடுவர்கள் அறிவித்தனர். இதனால் மும்பைக்கு புத்துயிர் கிடைத்தது.

சூப்பர் சிக்ஸ் அடித்த தரே

சூப்பர் சிக்ஸ் அடித்த தரே

அந்தப் பந்தை ஆதித்யா தரே எதிர்கொண்டார். என்ன பண்ணப் போகிறாரோ என்று ஸ்டேடியமே சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தபோது, ஷான் வாட்சன் வீசிய பந்தை அப்படியே தூக்கி அடித்தார் பாருங்கள்.. பந்து சிக்ஸராக மாறி போய் பார்வையாளர்கள் மத்தியில் விழுந்தது.

சட்டையைக் கழற்றிப் போட்டு ஓடிய தரே

சட்டையைக் கழற்றிப் போட்டு ஓடிய தரே

சிக்ஸர் அடித்து அணியை பிளே ஆப்புக்குள் தகுதி பெற வைத்து விட்ட உற்சாகத்தில் பேட்டை கீழே போட்டு விட்டு அப்படியே தனது ஜெர்சியை தூக்கி தலைக்கு மேல் மாட்டி விட்டபடி பயங்கர சந்தோஷத்தில் ஸ்டேடியத்திற்குள் ஓடினார் தரே.. மும்பை இந்தியன்ஸ் வீரர்களோ உற்சாகத்தி்ல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி வெறித்தனமாக உற்சாகக் குரல் எழுப்பியபடி அவரை விரட்டிச் சென்று அன்பு முத்தங்களை மாறி மாறி கொடுத்து சந்தோஷித்தனர்.

ஹர்பஜனாக மாறி நீதாவைத் தூக்கிய கோரி

ஹர்பஜனாக மாறி நீதாவைத் தூக்கிய கோரி

மறுபக்கம் மும்பைஇந்தியன்ஸ் அணி உரிமையாளரான நீதா அம்பானியும் பெரும் உற்சாகமாக காணப்பட்டார். அவர் 95 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த கோரி ஆண்டர்சனை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். கோரியும், கிடைத்த சான்ஸை விடாமல் நீதாவை லேசாக தூக்கி சந்தோஷப்பட்டார்.

முகம் செத்துப் போன ராஜஸ்தான் ராயல்ஸ்

முகம் செத்துப் போன ராஜஸ்தான் ராயல்ஸ்

கண்ணிமைக்கும் நேரத்தில் பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதால் வெறுத்துப் போய் விட்டனர் ராஜஸ்தான் வீரர்கள். கேப்டன் வாட்சன் அப்படியே நின்று விட்டார் சில நிமிடங்களுக்கு.

புதிய சாதனை

புதிய சாதனை

இதுவரை எந்த ஒரு டுவென்டி 20 போட்டியிலும் 14.4 ஓவர்களில் 195 ரன்கள் எடுக்கப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு புதிய சாதனையாக பதிவாகி விட்டது.

அபாரமான ஆண்டர்சன்

அபாரமான ஆண்டர்சன்

முன்னதாக 44 பந்துகளை மட்டுமே சந்தித்த மும்பை வீரர் ஆண்டர்சன் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 95 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னையுடன் மோதல்

சென்னையுடன் மோதல்

அடுத்து மே 28ம் தேதி மும்பையில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை மோதுகிறது. இதில் வெல்லும் அணி, முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வி அடையும் அணியைச் சந்ததித்தாக வேண்டும்.

முதல் குவாலிபயர்

முதல் குவாலிபயர்

மே 27ம் தேதி முதல் குவாலிபயர் போட்டி நடைபெறும். இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

Story first published: Monday, May 26, 2014, 14:29 [IST]
Other articles published on May 26, 2014
English summary
MI have qualfied for the playoff round in IPL 7 in the 14.4 overs in a clash between MI and RR yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X