For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்றில் முதல் முறை.. ஆண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்தார் பெண் வீராங்கனை!

By Veera Kumar

அடிலெய்டு: வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பெண் வீரர் ஒருவரும் கலந்து ஆடுகிறார்.

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும், இன்று தொடங்கும் இரு நாள் போட்டியில் விளையாடுககின்றன. இந்த போட்டித்தொடரில் வடக்கு மாவட்டங்களுக்கான அணிக்காக, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சாரா டைலர் பங்கேற்று ஆடுகிறார்.

Historic feat: England woman cricketer to play in men's game

1987ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இத்தொடரில் பெண் ஒருவர் ஆண்கள் அணியுடன் இணைந்து பங்கேற்பது இதுவே முதல் முறை.

இதுபற்றி சாரா டைலர் கூறுகையில், "ஆண்களுக்கு எதிரான, கிரிக்கெட் போட்டியில் பேட் செய்யும்போது பந்து வேகமாகவும், எகிறியும் வரும். இருப்பினும், அதையும் சமாளித்து ஆட வேண்டும் என்ற உத்வேகத்தில் நான் களமிறங்கியுள்ளேன். எனது திறமையை கணிக்க அது ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

Story first published: Friday, October 16, 2015, 12:21 [IST]
Other articles published on Oct 16, 2015
English summary
England wicketkeeper Sarah Taylor will make history tomorrow (October 17) when she becomes the first woman to play in a men's A-grade cricket match in Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X