For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் ஹிட்மேன் ரோகித் சர்மாவின் 33வது பிறந்தநாள்... விளையாட்டு வீரர்கள் வாழ்த்து

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் என்று புகழப்படும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Rohit Sharma Birthday special | Story of Rohit Sharma in Tamil

இந்தியாவின் பல்வேறு தருணங்களில், அணியின் வெற்றிக்கு பல விதங்களில் உதவிபுரிந்தவர் ரோகித் சர்மா. துவக்க ஆட்டக்காரராக அணியை வழிநடத்தி வருபவர்.

ரோகித் சர்மாவின் பிறந்த தினத்தையொட்டி சக வீரர்கள் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரே அழுக்கா இருக்கு.. அதெல்லாம் தொட முடியாது.. ஹர்பஜன் சிங்குடன் முட்டி மோதிய ஆஸி. அம்பயர்!ஒரே அழுக்கா இருக்கு.. அதெல்லாம் தொட முடியாது.. ஹர்பஜன் சிங்குடன் முட்டி மோதிய ஆஸி. அம்பயர்!

ஒருநாள் போட்டிகளில் 3 டபுள் சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் 3 டபுள் சதங்கள்

இந்தியாவின் ஹிட்மேன் என்று புகழப்படும் ரோகித் சர்மா, கடந்த 2007 ஜூன் 23ம் தேதி தனது முதல் போட்டியை ஆடினார். ஆரம்பத்தில் இவரது ஆட்டம் மெதுவாக துவங்கினாலும் தொடர்ந்து ஹிட் அடித்தது. இவர் 3 டபுள் சதங்களை தன்னுடைய ஒருநாள் போட்டிகளில் அடித்து ரசிகர்களை அன்பை பெற்றவர்.

ஆஸி, இலங்கைக்கு எதிராக இரட்டை சதங்கள்

ஆஸி, இலங்கைக்கு எதிராக இரட்டை சதங்கள்

கடந்த 2013ம் ஆண்டில் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 158 பந்துகளில் 209 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் ரோகித் சர்மா. இதன்மூலம் இந்தியா 57 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. இதேபோல கடந்த 2014ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்களையும் 2017ல் இலங்கைக்கு எதிராக 208 ரன்களும் அடித்துள்ளார் ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து

மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து

இந்நிலையில் கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கியுள்ள ரோகித் சர்மா தன்னுடைய 33வது பிறந்த தினத்தை தன்னுடைய வீட்டில் இருந்தபடியே கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ஐபிஎல் அணி மும்பை இந்தியன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல் 45 டிவீட்களை தன்னுடைய தளத்தில் பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

சக வீரர்கள் வாழ்த்து

சக வீரர்கள் வாழ்த்து

ரோகித் சர்மாவின் பிறந்த தினத்தையொட்டி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். இதேபோல ஹனுமா விஹாரி, கார்ன் சர்மா, கலீல் அகமது, மயங்க் அகர்வால், ரீமா மல்ஹோத்ரா உள்ளிட்டவர்களும், ஐபிஎல் தளமும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட்.காம் வலைதளமும் ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, April 30, 2020, 15:13 [IST]
Other articles published on Apr 30, 2020
English summary
Hitman Rohit Sharma turns 33
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X