For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு சத்தியமா புரியலைங்க.. ஒரே கேலிக் கூத்தா இருக்கு.. ஹோல்டிங் புலம்பல்

டெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் சிஸ்டம் பெரும் குழப்பமாக இருக்கிறது, கேலிக் கூத்தாக இருக்கிறது என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.

தற்போது உள்ள புள்ளிகள் முறைப்படி, 2 போட்டிகள் கொண்ட தொடரில் அணிகள் வெல்லும் ஒவ்வொரு போட்டிக்கும் 60 பாயிண்ட்டுகள் தரப்படும். அதேசமயம், அதுவே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு போட்டியின் வெற்றிக்கு 24 புள்ளிகள்தான் தரப்படும்.

எனவே அடிப்படையில் ஒரு அணியானது எத்தனை போட்டிகள் விளையாடுகிறதோ அதைப் பொருத்து இல்லாமல், ஒரு தொடரிலிருந்து அதிகபட்சம் 120 புள்ளிகள் வரை பெற முடியும். இதுதான் தற்போது உள்ள நடைமுறை. முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

டி20 உலக கோப்பையை ஒத்திவைக்கிற சூழல் வந்தா அத செஞ்சிதான் ஆகணும் -ஜேசன் ராய்டி20 உலக கோப்பையை ஒத்திவைக்கிற சூழல் வந்தா அத செஞ்சிதான் ஆகணும் -ஜேசன் ராய்

அடுத்த ஆண்டு பைனல்

அடுத்த ஆண்டு பைனல்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதான் இந்த சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில்தான் இந்த புள்ளிகள் விவரத்திற்கு விமர்சனம் வந்துள்ளது ஹோல்டிங் மூலமாக. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிவித்துள்ளார்.

ஹோல்டிங் அதிருப்தி

ஹோல்டிங் அதிருப்தி

முதலில் இந்த பாயிண்ட் முறையே கேலிக்கூத்தாக உள்ளது. 2 போட்டிகளில் விளையாடி கிடைக்கும் பாயிண்ட்டுகளை நீங்கள் ஐந்து போட்டிகள் விளையாடியும் எடுக்க முடியாது என்றால் எப்படி. அடுத்து, சில அணிகளுக்குப் பாதியிலேயே தெரிந்து விடும் நாம் இறுதிப் போட்டிக்குப் போக முடியாது என்று. எனவே அவர்கள் ஈடுபாட்டுடன் ஆட மாட்டார்கள். எனவே சுவாரஸ்யம் குறைந்து போய் விடும். இதை மக்களும் ஆர்வமாக பார்க்க மாட்டார்கள் என்று ஹோல்டிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வோக்ஸுக்கும் பிடிக்கலை

வோக்ஸுக்கும் பிடிக்கலை

இதே கருத்தையே இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸும் எதிரொலித்துள்ளார். பாயிண்ட் முறையில் மாற்றம் தேவை. அதை எதிர்காலத்தில் செய்தாக வேண்டும். கண்டிப்பாக இதை செய்தாக வேண்டும். டாஸ், சுற்றுச்சூழலைப் பொறுத்து போட்டிகளின் முடிவுகள் மாறக் கூடும். எனவே ஒரு போட்டி பைனலுக்குப் பதில் 3 போட்டிகள் கொண்ட பைனலாக மாற்றினால் நல்லாயிருக்கும் என்றார் வோக்ஸ்.

பைனல் நடக்குமா

பைனல் நடக்குமா

இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் முடங்கிப் போயுள்ளன. டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவில்லை. எனவே அடுத்த ஆண்டு இறுதிப் போட்டி நடைபெறுமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

Story first published: Monday, May 4, 2020, 15:30 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Former WI pacer Holding has ridiculed the World Test Championship's points system
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X