For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் இன்னிங்சில் இந்தியா சரியா பேட்டிங் செய்யல அவ்வளவுதான்.. பிட்ச் எல்லாம் சிறப்பாக இருந்தது!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்ற நிலையில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்ற நிலையில், மைதானத்தில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்! இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

இந்நிலையில் பிட்ச் எல்லாம் சரியாகவே இருந்ததாகவும் முதல் இன்னிங்சில் இந்தியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை என்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் முறையே 112 மற்றும் 145 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

இங்கிலாந்து புகார்

இங்கிலாந்து புகார்

போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்ததாகவும் அதனால்தான் சிற்பபான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் இங்கிலாந்து தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அணி ஐசிசிக்கு புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகம்

பேட்ஸ்மேன்களுக்கு சாதகம்

இந்நிலையில் உண்மையாக பேசவேண்டுமென்றால் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்சாக அமைந்திருந்ததாகவும் ஆனால் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை என்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். பேட்டிங் செய்தபோது அதிகமான மிஸ்டேக்குகளை இந்திய அணி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ரன்களை குவிப்பதில் கவனம்

ரன்களை குவிப்பதில் கவனம்

செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, தான் மைதானத்தில் நிலைத்து நின்று ஆடுவதற்கு எப்போதும் முயற்சி செய்ததில்லை என்றும் எப்போதும் சிறப்பான பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவிப்பதிலேயே தனது கவனம் இருக்கும் என்றும் ரோகித் சர்மா மேலும் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 26, 2021, 10:53 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
My intent was not to survive, to score runs while respecting good balls -Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X