For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் ஆனால் தோனி கிரிக்கெட்டின் அரசன்.. புகழும் வீரர்

Recommended Video

என் சுயசரிதையில் தோனிக்கு முக்கிய பகுதி : எஹ்சான் கான்- வீடியோ

ஹாங்காங் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தன் முதல் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணியோடு மோதியது.

அந்த போட்டியில் இந்தியா தடுமாறி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் கத்துகுட்டி அணி என்றாலும், இந்தியாவை நீண்ட நேரம் தவிக்க வைத்தது.

அந்த போட்டியில் தோனியின் விக்கெட்டை கைப்பற்றினார் ஹாங்காங் அணியின் சுழற்பந்துவீச்சாளர் எஹ்சான் கான். அவர் தான் தற்போது தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

அதிர்ச்சி அளித்த தோனி

அதிர்ச்சி அளித்த தோனி

ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணியில் தோனி நன்றாக ஆடுவாரா? தன் பேட்டிங்கை நிரூபிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது களம் இறங்கிய தோனி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எஹ்சான் கான் வீசிய பந்து எங்கே செல்கிறது என கணிக்க முடியாத தோனி, கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

புத்தகத்தில் தோனி

புத்தகத்தில் தோனி

அதை நினைவு கூர்ந்த எஹ்சான் கான், தான் எதிர்காலத்தில் தன் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுத உள்ளதாகவும், அதில் தோனியை பற்றி ஒரு முக்கிய பகுதி நிச்சயம் இருக்கும் என கூறியுள்ளார்.

தோனி கிரிக்கெட்டின் அரசன்

தோனி கிரிக்கெட்டின் அரசன்

தோனி கிரிக்கெட்டின் அரசன் எனவும் கூறியுள்ளார் இவர். "சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் தோனி கிரிக்கெட்டின் அரசன். என் கிரிக்கெட் வாழ்வு பற்றி ஒரு புத்தகம் எழுத உள்ளேன். அதில் தோனி தான் முக்கிய பகுதி. நான் அதை என் பேரக்குழந்தைகளுக்கு படித்து காண்பிப்பேன்" என பெருமிதத்தோடு கூறினார்.

மரியாதை செலுத்தினேன்

மரியாதை செலுத்தினேன்

"என் கனவுகளில் சச்சின் அல்லது தோனியின் விக்கெட்டை வீழ்த்துவது போல யோசித்து பார்ப்பேன். சச்சினின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஆனால், தோனியின் விக்கெட்டை எடுத்து விட்டேன். அதனால், தான் நான் விக்கெட் எடுத்த உடன் கீழே குனிந்து மரியாதை செலுத்தினேன்" என கூறுகிறார் எஹ்சான் கான்.

Story first published: Wednesday, October 3, 2018, 18:50 [IST]
Other articles published on Oct 3, 2018
English summary
Hongkong batsmen praises Dhoni and say he is King of Cricket. He also planned to write a book and in which Dhoni will be a main part.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X