இதுதான் சூட்சமம்.. இங்கிலாந்தை யோசிக்க கூட விடாமல் காலி செய்த அக்சர் & அஸ்வின்.. எப்படி நடந்தது?

அகமதாபாத்: இங்கிலாந்து அணியை இந்திய ஸ்பின் பவுலர்கள் கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் இன்று விக்கெட் எடுத்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன் முடிய உள்ளது. இரண்டு நாட்களில் இந்த டெஸ்ட் போட்டி முடிவிற்கு வருகிறது.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனது. அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

எப்படி

எப்படி

இங்கிலாந்தை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இன்று களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே அக்சர் பவுலிங்கில் 2 விக்கெட்டை இழந்தது. அதன்பின் ரூட், ஸ்டோக்ஸ் கொஞ்சம் நிதானமாக ஆடினாலும், அவர்களும் சில மணி நேரத்தில் அவுட் ஆனார்கள்.

அவுட்

அவுட்

வரிசையாக அக்சர் டாப் ஆர்டர் வீரர்களை விக்கெட் எடுக்க அதன்பின் மிடில் ஆர்டர் வீரர்களை அஸ்வின் காலி செய்தார். கடைசியில் இருந்த ஒரு விக்கெட்டையும் வாஷிங்க்டன் சுந்தர் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கு அவுட் ஆனது.

அக்சர்

அக்சர்

சிறப்பாக பவுலிங் செய்த அக்சர் மீண்டும் 5 விக்கெட் எடுத்தார். முதல் இன்னிங்சிலும் இவர் 5 விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் எடுத்தார். இரண்டு அணிகளும் இதுவரை ஆடிய இன்னிங்ஸ்ல் 30 விக்கெட் மொத்தமாக விழுந்துள்ளது.

விக்கெட்

விக்கெட்

இதில் 28 விக்கெட்டுகளை ஸ்பின் பவுலர்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளனர். அஸ்வின், அக்சர் மட்டும் இதில் 17 விக்கெட்டுகளை இதில் எடுத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஆதரவாக இருந்துள்ளது. ஸ்பின் பிட்ச், களிமண் தரை என்பதுதான் இந்த இரண்டு பேரின் நல்ல பவுலிங்கிற்கு முக்கிய காரணம் ஆகும் .

பந்து

பந்து

பிங்க் பாலும் இந்த பிட்சும் ஒன்றாக சேர்ந்ததுதான் ஆட்டம் மாறுவதற்கு காரணமாக அமைந்தது. பிங்க் பால் சாதாரணமாகவே ஸ்விங் ஆகும். இதில் பிட்சும் ஸ்பின் பிட்ச் என்பதால் இங்கிலாந்து அணி மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

பிட்ச்

பிட்ச்

ஆனால் பிட்ச் மட்டுமே இதற்கு காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இந்த பிட்சை அக்சர், அஸ்வின் பயன்படுத்திய விதம்தான் ஆட்டத்தை புரட்டி போட்டுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டிக்கும் பெரும்பாலும் பிட்ச் இதேபோல் வடிவமைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
How Ashwin and Axar spin bowling demolishes England batting order in the 3rd test today?
Story first published: Thursday, February 25, 2021, 19:16 [IST]
Other articles published on Feb 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X