For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அந்த" ஒரு இந்திய பவுலர்.. கலங்கும் நியூசிலாந்து.. வேறோடு பிடுங்கி எறிவதில் கில்லாடி

லண்டன்: இந்திய அணியின் பவுலர் ஒருவர், நியூசிலாந்துக்கு எந்த அளவுக்கு தொந்தரவாக இருக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கவிருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

உமேஷின் விரலில் ரோகித்தின் திருமண மோதிரம்... ஹோட்டலில் நடந்த வேடிக்கை சம்பவம்.. கோலி செய்த சேட்டை உமேஷின் விரலில் ரோகித்தின் திருமண மோதிரம்... ஹோட்டலில் நடந்த வேடிக்கை சம்பவம்.. கோலி செய்த சேட்டை

சவால் நிறைந்த களம். உலகின் நம்பர்.1 டெஸ்ட் பேட்ஸ்மேனை கொண்டிருக்கும் அணி, உலகத் தரம் வாய்ந்த பவுலிங் யூனிட் என்று கோலி படைக்கு பெரும் சவாலே காத்திருக்கிறது.

நியூஸி.,க்கும் ஆபத்து

நியூஸி.,க்கும் ஆபத்து

இந்திய அணியைப் பொறுத்தவரை, பயிற்சிப் போட்டிகள் இல்லாமல் களமிறங்குவது மிகப்பெரிய மைனஸ் என்பதே எக்ஸ்பெர்ட்ஸ்களின் கருத்து. இந்திய முதல் உலகின் பல்வேறு நாடுகளின் எக்ஸ்பெர்ட்ஸ்கள் என அனைவரும் இந்தியாவை விட நியூஸிலாந்துக்கே ஒரு படி வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர். சிலரோ, நியூசிலாந்துக்கு தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்று அடித்துக் கூறுகின்றனர். ஆனால், இங்கு நான் சொல்கிறேன்.. நியூசிலாந்து அணிக்கும் ஆபத்து இருக்கிறது என்று.

சான்ட்னர் பேட்ஸ்மேனா?

சான்ட்னர் பேட்ஸ்மேனா?

ஆம்! இந்திய அணியின் அந்த ஒரு வீரர் நியூசிலாந்தின் நம்பிக்கையை முதல் இன்னிங்சிலேயே குலைக்கும் வலிமை பெற்றவர். அவருக்கு மட்டும் அந்த நாள் க்ளிக் ஆகிவிட்டால், நியூசிலாந்து பாடு திண்டாட்டமே. அவர் ரவிச்சந்திரன் அஷ்வின். வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின், இடது கை பேட்ஸ்மேன்களை "காலி" செய்வதில் வல்லவர். நியூசிலாந்து அணியில் டாம் லாதம், அறிமுக போட்டியில் 'இரட்டை சதம்' விளாசிய டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், மிட்சல் சான்ட்னர் ஆகிய நான்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சான்ட்னர் பேட்ஸ்மேனா? என்று கேட்காதீர்கள். டெஸ்ட் போட்டியில் அவரது பெஸ்ட் ஸ்கோர் 126.

முடிவு இந்தியாவின் கைகளில்

முடிவு இந்தியாவின் கைகளில்

அதாவது, நியூசிலாந்தின் பேட்டிங் யூனிட்டில் பாதிக்கு பாதி அலல்து பாதிக்கும் அதிகம் இடது கை பேட்ஸ்மேன்கள் தான். இவர்களில் மூன்று பேரை அஷ்வின் முதல் இன்னிங்ஸில் விரைவில் வீழ்த்திவிட்டால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி என்று உறுதியாக கூறுவேன். நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் கேன் வில்லியம்சன் மட்டுமே. அவர் மட்டும் தனியாக இன்று சதம் அடித்தால் கூட, இந்த நான்கு இடது கை பேட்ஸ்மேன்களை அஷ்வின் அவுட்டாக்கிவிட்டால், போட்டியின் முடிவு இந்தியாவின் கைகளில் தான்.

மகத்தான பங்கு

மகத்தான பங்கு

அதுமட்டுமின்றி, ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக சாதித்திருப்பவர் அஷ்வின். இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்திருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது களம் வேறு என்றாலும், மூச்சைப் பிடித்து 30 ரன்கள் வரை அஷ்வின் தாக்குப்பிடிப்பார் என்று நம்பலாம். ஒட்டுமொத்தமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், அஷ்வினின் பங்கு நிச்சயம் மகத்தானது என்பதை போட்டி முடிந்து ரசிகர்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்.

Story first published: Wednesday, June 9, 2021, 19:54 [IST]
Other articles published on Jun 9, 2021
English summary
ashwin world test championship final - ரவிச்சந்திரன் அஷ்வின்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X