For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஓவருக்கு முன்பே "செக்" வைத்த தோனி.. பொறியில் சிக்கிய பொல்லார்ட் - எதிர்பார்க்காத ரோஹித்!

துபாய்: தோனி.. தோனி.. என்று இன்னும் பல வருடங்களுக்கு அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடலாம். அந்தளவுக்கு ஒர்த் கேப்டன்சி நேற்று செய்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

Recommended Video

Mumbai Indians-ஐ வீழ்த்தி பழிதீர்த்தது CSK.. Points Table-லும் முதலிடம்

நேற்று, மும்பைக்கு எதிராக துபாயின் Pace டிராக்கில் டாஸ் வென்ற அடுத்த நொடி, பேட்டிங் என்று அறிவித்தார் தோனி. அதை பேட்டி எடுப்பவரிடம் கூட சொல்லவில்லை. டாஸ் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் சொல்லிவிட்டு தான், பேட்டி எடுத்த முரளி கார்த்திக்கிடம் பேட்டிங் செய்கிறோம் என்று கூறினார்.

அந்தளவுக்கு டாஸ் வென்றால் பேட்டிங் செய்வது என்று தெளிவான முடிவை தோனி எடுத்திருந்தார். ஆனால், பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் முக்கால்மணி மணி நேரம் காற்று மும்பை பக்கமே வீசியது.

how dhoni set bowling plan to remove mi skipper pollard

டு பிளசிஸ், மொயீன் அலி டக் அவுட் ஆக, ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக வெளியேற, ரெய்னா வெறும் 4 ரன்களிலும், தோனி 3 ரன்களிலும் காலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 24-4 என்று தள்ளாடியது. பிறகு ருதுருராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று விளையாடி 58 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து கடைசி வரை அட்டமிழக்காமல் நின்றதை வரலாறு அறியும். ஜடேஜா மற்றும் ப்ராவோ அட்டகாசமான கேமியோ ரோல் ஆட, 156-6 என்று ஹீரோயிக் இன்னிங்ஸ் விளையாடியது சிஎஸ்கே.

இதன் பிறகு, 157 எனும் இந்த எளிய டார்கெட்டை அடிக்க விடாமல் மும்பையை அணியை வீழ்த்தியது தோனியின் சாமர்த்தியம் என்றே கூறுவேன். தீபக் சாஹரின் அபாரமான தொடக்க ஸ்பெல், இக்கட்டான நேரத்தில் பொல்லார்டை ஹேசில்வுட் காலி செய்தது, பிராவோவின் 'கம்பேக்' பவுலிங் என்று அனைத்தும் நேற்று தோனிக்கு கைக்கொடுத்தாலும் அவரது கேப்டன்சி உண்மையில் நேற்று ரசிகர்களை வாவ் போட வைத்தது.

இதில் தோனியின் மூன்று மூவ்களை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

முதல் மூவ் - பிட்ச் நேற்று ஸ்லோவாக இருந்ததை பக்காவாக அனலைஸ் செய்த தோனி, தீபக் சாஹர் ஓவர்களை ஆரம்பத்திலேயே நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஓப்பனிங்கிலேயே 3 ஓவர்களை கொடுத்துவிட்டார். அதன் பயனாக குயின்டன் டி காக், அன்மோல்ப்ரீத் என்று இரண்டு ஒப்பனர்களும் பெவிலியன் அனுப்பப்பட்டார்கள்.

களத்தில் அமைதியிழந்து சீறிய 'மிஸ்டர் கூல்' தோனி.. சி.எஸ்.கே வீரருடன் மோதல்.. என்ன நடந்தது? களத்தில் அமைதியிழந்து சீறிய 'மிஸ்டர் கூல்' தோனி.. சி.எஸ்.கே வீரருடன் மோதல்.. என்ன நடந்தது?

இரண்டாவது மூவ் - பிராவோ பந்து வீச வந்த போது, வட்டத்துக்கு உள்ளே நான்கு ஃபீல்டர்களை நிற்கவைத்தார் தோனி. ஏன் தெரியுமா? சிங்கிள்ஸ் அதிகம் செல்வதைத் தடுக்க. இதனால், பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டி20 கிரிக்கெட்டில் இதுதான் ஒரு பெரிய ஏழ்ற. நீங்கள் ஒரு ஓவரில் 2 பந்துகளை சேர்ந்தாப்ல சாப்பிட்ட கூட ஆட்டோமேட்டிக்கா பிரஷர் ஏறிடும். அப்படி நான்கு பெஸ்ட் ஃபீல்டர்களை வட்டத்துக்குள் நிற்க வைத்து, இஷான் கிஷனை அடிக்கத் தூண்டி காலி செய்தார் தோனி. மற்றபடி, க்ருனால் பாண்ட்யா ரன் அவுட் ஆனதெல்லாம், 110 கிலோ உடல் எடையைத் தூக்கிக் கொண்டு சவுரப் திவாரி ஓடமுடியாமல் நின்றதால் தான். பிராவோ இல்ல.. அந்த இடத்தில் வேறு எந்த ஃபீல்டர்ஸ் இருந்திருந்தாலும், க்ருனால் ரன் அவுட்டாகி இருப்பார்.

மூன்றாவது மூவ் - பொல்லார்ட் களமிறங்கிய போதும் ஜோஷ் ஹேசில்வுட்டை பந்து வீச அழைத்தது.. அதைவிட, ஜடேஜாவுக்கு அப்போது ஓவர் தராமல் நிறுத்தியது தான் தோனி எடுத்த மிக முக்கிய முடிவு. இல்லையெனில், பந்து பெவிலியன் தாண்டி பறந்திருக்கும். பொல்லார்ட் செட் ஆகி பந்துகளை அடிக்க ஆரம்பிக்கும் போது. மிகச் சரியாக ஹேசில்வுட்டை அழைத்து வந்து எல்பி ஆக்கினார் தோனி. இந்த விக்கெட் தான் ஆட்டத்தின் முடிவை மும்பை பக்கம் இருந்து மாற்றியது என்றால் அதனை தோனியே ஒப்புக் கொள்வார்.

ஆனால் ஒன்று.. என்னதான் தோனி பெர்ஃபெக்ட்டாக ஃபீல்டிங் செட் வைத்தாலும், ஃபீல்டிங் பொசிஷனுக்கு ஏற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்ஸ் அனைவரும் வீசியது தான் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

Story first published: Monday, September 20, 2021, 19:50 [IST]
Other articles published on Sep 20, 2021
English summary
how dhoni set bowling plan remove mi skipper pollard - தோனி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X