For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா ஜெயிக்கவில்லை..... ராஜஸ்தான் தோற்றது.... ஐபிஎல்லில் பரிதாபம்!

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணி அபாரமாக வென்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன்சி முக்கிய பங்கு வகித்தது.

Recommended Video

ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது கொல்கத்தா

கொல்கத்தா: ஐபிஎல்லில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த லீக் ஆட்டங்கள் முடிந்து, பிளே ஆப் சுற்றுகள் துவங்கியுள்ளன என்ற நினைப்பே இல்லாமல் ராஜஸ்தான் விளையாடியதோ என்று எண்ணும் அளவுக்கு நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டம் அமைந்திருந்தது.

ஐபிஎல் சீசன் 11 கடந்த மாதம் 7ம் தேதி துவங்கியது. 56 லீக் சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைன்ல்ஸ் முன்னேறியது.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் நைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

பேட்டிங்கில் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பல்

ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 25 ரன்களில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில், ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது.

கேப்டன்கள் அசத்தல்

கேப்டன்கள் அசத்தல்

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜங்யா ரஹானே அபாரமாக விளையாடினர். இருப்பினும் தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் கொல்கத்தாவுக்கு மிகப் பெரிய பலமாகும்.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

துவக்க நிலை ஆட்டக்காரர்கள் வலுவான ஸ்கோரை அளித்தனர். மிகச் சுலபமாக ராஜஸ்தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டத்தில் பதற்றத்தில் வெற்றி பெறும் நல்ல வாய்ப்பை ராஜஸ்தான் இழந்தது.

மிகப்பெரிய சவால்

மிகப்பெரிய சவால்

மற்ற அணிகள் தோற்றதால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் தோற்றதால், 2வது தகுதி சுற்றுக்கு கொல்கத்தா முன்னேறியது. அதில் மிகவும் வலுவான ஹைதராபாத் அணியை சந்திக்க உள்ளது.

Story first published: Thursday, May 24, 2018, 11:46 [IST]
Other articles published on May 24, 2018
English summary
kkr wins over rr in the ipl eliminator.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X