For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி விடாமல் எஸ்எம்எஸ் அனுப்பி அனில் கும்ப்ளேவை காலி பண்ணினார்!! பிசிசிஐ சண்டையில் வெளியான உண்மை

மும்பை : பிசிசிஐ நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி, மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வில் தலையிட்டு ரமேஷ் பவாரை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என கூறி வருகிறார்.

அந்த பிரச்னையில், கேப்டன் கோலி - முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே இருந்த மோதலை இழுத்து விட்டு, உதாரணமாக காட்டியுள்ளார்.

இதில் உச்சகட்டமாக, கோலி எப்படி அனில் கும்ப்ளேவை வெளியேற்றினார் என்பது பற்றிய உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் பவார் பதவி

ரமேஷ் பவார் பதவி

மகளிர் கிரிக்கெட்டில் உலக டி20யின் போது மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாத விவகாரம் பெரிதானது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம் என கூறப்பட்டது. அவரது பதவிக் காலமும் முடிந்த நிலையில், அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கி உள்ளது.

கேப்டன் - துணை கேப்டன் வேண்டுகோள்

கேப்டன் - துணை கேப்டன் வேண்டுகோள்

டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் ரமேஷ் பவார் தான் கேப்டனாக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். ஆனாலும், இதற்கு ஒரு சிலர் தவிர பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் எதிர்ப்பு உள்ளது.

விராட் கோலி - கும்ப்ளே விவகாரம்

விராட் கோலி - கும்ப்ளே விவகாரம்

ரமேஷ் பவாருக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி, கோலி எப்படி அனில் கும்ப்ளேவை நீக்கிவிட்டு, தனக்கு பிடித்த ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்துக் கொண்டாரோ, அதே போல தான் மகளர் கிரிக்கெட்டிலும் நடக்கிறது. அதிலும் கோலி போல ரகசியமாக அல்லாமல், மகளிர் கிரிக்கெட் அணியினர் வெளிப்படையாக மெயில் அனுப்பி தங்கள் ஆதரவை ரமேஷ் பவாருக்கு அளித்துள்ளனர் என கூறியுள்ளார்.

வெளியான உண்மை இது தான்

வெளியான உண்மை இது தான்

இந்த இடத்தில் தான் ஒரு ரகசியத்தை உடைத்தார் டயானா. கோலி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரிக்கு விடாமல் எஸ்எம்எஸ் அனுப்பி அனில் கும்ப்ளேவை நீக்க வைத்து, பின்னர் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்துக் கொண்டார். அதில் பல விதி மீறல்களும் இருந்தன என உண்மையை போட்டு உடைத்தார். இதன் மூலம், அனில் கும்ப்ளேவை நீக்க கோலி எந்த அளவிற்கு வேலை செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கும்ப்ளே வில்லன் ஆனார்

கும்ப்ளே வில்லன் ஆனார்

"அந்த சமயத்தில் அனில் கும்ப்ளேவை வில்லன் போல சித்திரித்து வெளியேற்றினார்கள். அப்போது, அனில் கும்ப்ளே பெருந்தன்மையுடன் தாமாகவே முன்வந்து பதவி விலகினார்" எனவும் டயானா குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் பவார் தான் வரணும்

ரமேஷ் பவார் தான் வரணும்

இந்த உதாரணத்தை வைத்து ரமேஷ் பவார் தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும். கோலி எப்படி ரவி சாஸ்திரியை விரும்பினாரோ, அதே போல டி20 கேப்டன் மற்றும் துணை கேப்டனின் விருப்பமான ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 12, 2018, 14:57 [IST]
Other articles published on Dec 12, 2018
English summary
How Kohli sack Anil Kumble and brought back Ravi Shasthri? The truth is out after BCCI CoA member reveals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X