சாஸ்திரி அப்படி சொன்னதும் மிரண்டுவிட்டேன்.. அதற்கு பின் நடந்ததுதான்.. சீக்ரெட்டை உடைத்த அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்றை குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

அதிலும் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் கேப்டன்சி பெரிய அளவில் இதில் பாராட்டப்பட்டுள்ளது. இந்திய அணியை ரஹானே மிகவும் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தே ரஹானேவின் கேப்டன்சி அதிகம் கவனிக்கப்பட்டது. அந்த போட்டியில் அஸ்வின் 10 ஓவர்கள் முடிந்த உடனேயே பவுலிங் செய்ய வந்தது ஆச்சர்யம் அளித்தது. ஸ்பின் பவுலரை ரஹானே விரைவாக களமிறங்கியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

அஸ்வின்

அஸ்வின்

அதேபோல் அஸ்வின் பவுலிங் போட வந்து சில நிமிடங்களில் விக்கெட்டுகளை எடுக்க தொடங்கினார். முக்கியமாக ஸ்மித் விக்கெட்டை அஸ்வின் எளிதாக வீழ்த்தினார். ஸ்பின் பவுலரை புதிய பந்தில், அதுவும் டெஸ்ட் போட்டியில் வீச வைத்து விக்கெட் எடுக்கப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றது.

ரஹானே

ரஹானே

இதற்காக ரஹானேவின் கேப்டன்சியை எல்லோரும் பாராட்டி வந்தனர். ஆனால் உண்மையில் இது ரஹானேவின் கேப்டன்சியால் ஏற்பட்டது இல்லை. இது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொடுத்த ஐடியா என்கிறார்கள். ஆம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் அஸ்வினிடம் முன்பே ஓவர் போடும்படி கூறியுள்ளார்.

பந்து ஸ்விங் ஆகும்

பந்து ஸ்விங் ஆகும்

பிட்ச் ஸ்பின் செய்ய தோதுவாக இருக்கும். அஸ்வின் முன்பே பவுலிங் செய்தால் விக்கெட் விழும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அஸ்வின் உட்பட எல்லோரும் மிரண்டு போய் உள்ளனர். அது எப்படி விக்கெட் விழும் என்று சந்தேகத்தில் இருந்துள்ளனர்.

 ஆச்சர்யம்

ஆச்சர்யம்

ஆனால் மைதானத்தில் சென்று பார்த்தால் பந்து ரவி சாஸ்திரி சொன்னபடி ஸ்விங் ஆகியுள்ளது. இதை பார்த்து அஸ்வின் மிரண்டு போய் உள்ளார். இப்படி இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பல இடங்களில் இந்திய அணிக்கு மிக முக்கியமான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
How Ravi Shastri changed Team India Bowling order to get Aussies wickets in the test series.
Story first published: Friday, January 22, 2021, 13:09 [IST]
Other articles published on Jan 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X