For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருமணி நேரம் போதும்.. மனதை லேசாக்க "புக் கிரிக்கெட்" - விளையாடுவது எப்படி?

சென்னை: முழு ஊரடங்கு உத்தரவில் கூட கிரிக்கெட் விளையாட முடியும்.. அதுவும் உங்க சோஃபாவுல உட்கார்ந்துக்கிட்டே.. எப்படி-னு கேட்குறீங்களா? அதான் 'புக் கிரிக்கெட்' .

இந்தியாவில் நிலவும் கொரோனா 2வது அலை, மக்களை வாட்டி வதக்கி வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பற்றிய செய்தி தான். டிவி, நியூஸ் பேப்பர் முதல் பேஸ்புக் டைம்லைன் வரை கோவிட் செய்திகளே நிரம்பி வழிகின்றன.

எல்லா வேலையும் ஓவர்.. பிசிசிஐ ஏற்படுத்திய திட்டம் நிறைவேறியது.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு ரெடிஎல்லா வேலையும் ஓவர்.. பிசிசிஐ ஏற்படுத்திய திட்டம் நிறைவேறியது.. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு ரெடி

இந்த இக்கட்டான சூழலில், ஒரே ஆறுதலாக இருந்தது ஐபிஎல் கிரிக்கெட் தான். ஓரளவுக்காவது மன அழுத்தங்களை போக்குவதில் சப்போர்ட் செய்து கொண்டிருந்த ஐபிஎல்லுக்குள்ளும் கொரோனா ஊடுருவ, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டது பிசிசிஐ.

நமக்கும் நல்லது

நமக்கும் நல்லது

தமிழகத்திலும் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் சூழலில், தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதனால், மிக அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே போனால், போலீஸ் வேட்டு வைத்துவிடுகிறது. வெளியே போகாமல் இருப்பது தான் உண்மையில் நமக்கும் நல்லது.

கிரிக்கெட் வெறியரா?

கிரிக்கெட் வெறியரா?

ஆனா, வீட்டுக்குள்ளேயே இருக்குறது எவ்ளோ கஷ்டம் என்பதை உணராமல் இல்லை. எவ்வளவு நேரம் தான் டிவி பார்ப்பது? ஃபோன் நோண்டுவது? ஒருகட்டத்தில் ச்சை.. என்கிற அளவுக்கு எரிச்சலாக வரும். மன அழுத்தமே அங்கிருந்து தான் தொடங்குகிறது. சரி.. எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஐபிஎல்-லை தவற விட்ட கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வெறியர்கள் நீங்களா? அப்படின்னா இந்த செய்தி உங்களுக்கு தான்.

90'ஸ் கிட்ஸ் பேவரைட்

90'ஸ் கிட்ஸ் பேவரைட்

இன்றைய 2k கிட்ஸ்-க்கு தெரியாத ஒரு விளையாட்டு 'புக் கிரிக்கெட்'. 90'ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான விளையாட்டு. ஸ்பெஷல் கிளாஸ் சென்று படித்ததை விட, நண்பர்களுடன் புக் கிரிக்கெட் விளையாடியவர்கள் இன்று உலகின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள். அந்தளவுக்கு, இதை விளையாடாத 90'ஸ் கிட்ஸ் இல்லை என்பதற்கு சொல்கிறேன்.

புத்தகம் தேவை

புத்தகம் தேவை

சரி.. இதை எப்படி விளையாடுவது? ஆட்டத்துக்கு முக்கியமாக தேவை இரண்டு பேர். ஒரு நல்ல பெரிய சைஸ் புக் ஒன்னு எடுத்துக்கோங்க. அதை ஒவ்வொரு முறையும் திறந்து திறந்து மூட வேண்டும். ஒவ்வொரு முறை திறக்கும் போதும், புத்தகத்தின் வலது பக்கத்தின் கீழ் உள்ள 'Page No' கவனிங்க. அதில், கடைசியா என்ன நம்பர் இருக்கோ.. அதுதான் உங்க ஸ்கோர். அதாவது நீங்க புத்தகத்தை திறக்கும் போதும், 46-ன்னு வந்துச்சுனா, 6 தான் உங்க ஸ்கோர். இப்படி '0' வரும் திறந்து திறந்து ஸ்கோர் எண்ணிக்கிட்டே வரணும். எப்போ ஜீரோ வருதோ அப்போ நீங்க அவுட். அதாவது முதல் விக்கெட் அவுட். அதுமாதிரி, 10 முறை ஜீரோ வரும் வரை விளையாடணும். கடைசியா 10 விக்கெட் ரன்களையும் கூட்டினா வரும் ரன்கள் தான் உங்க டோட்டல் ஸ்கோர்.

ஃப்ரீயா இருங்க

ஃப்ரீயா இருங்க

அப்புறம், உங்கள் நண்பர் அதே மாதிரி விளையாடனும். அவர் உங்கள் டோட்டல் ஸ்கோரை தாண்டிட்டா அவர் வின்னர். இல்லனா, நீங்க தான் வெற்றியாளர். இந்த விளையாட்டுக்கு இரண்டு பேருன்னு மட்டுமல்ல.. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். 90'ஸ் கிட்ஸ் இதுல டோர்னமெண்ட்-லாம் நடத்தி ஜமாய்ச்சிருக்காங்க-னா பார்த்துக்கோங்க. அதுமட்டுமில்ல, வீட்டில் உள்ள அனைவர்களுடன் மனம்விட்டு ஜாலியா ஒரு மணி நேரம் செலவழிக்க அருமையான டைம்பாஸ் இந்த புக் கிரிக்கெட் எனலாம். மனசும் லேசாகும். ட்ரை பண்ணிப் பாருங்க.

Story first published: Tuesday, May 25, 2021, 20:15 [IST]
Other articles published on May 25, 2021
English summary
how to play book cricket full lockdown at home - கிரிக்கெட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X