For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏர்போர்ட்டில் அவமானப்படுத்திட்டாங்க.. பொங்கிய முன்னாள் கேப்டன்..! அதிர்ந்த கிரிக்கெட் உலகம்

இஸ்லாமாபாத்: மான்செஸ்டர் விமான நிலையத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக வாசிம் அக்ரம் கூறியது, கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருபவர். கிரிக்கெட் உலகில் அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு இதுவும் தெரிந்திருக்கும்.

Humiliated in manchester airport says former captain wasim akram

அவர் களத்தில் விளையாடிய காலத்தில், இன்சுலின் மருந்தை எடுத்துக் கொண்டு ஆடுபவர். இந்நிலையில் அவர், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டதாக தெரிகிறது.

அந்த தகவலை அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இன்சுலின் வைத்திருந்த குளிர்பதனப் பெட்டியில் இருந்து அதை எடுத்து பிளாஸ்டிக் பையில் வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தமது டுவிட்டர் பதிவில் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது: மான்செஸ்டர் விமான நிலையத்தில் மனம் உடைந்து போனேன். நான் இன்சுலின் பெட்டியுடன் தான் உலகம் முழுக்க பயணிக்கிறேன்.

ஆனால் ஒரு தடவை கூட என்னை யாரும் தர்மசங்கடமான நடத்தியது இல்லை, கேள்விகளை கேட்டதில்லை. இந்த முறை அனைவர் முன்னிலையில் என்னை நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, July 23, 2019, 23:15 [IST]
Other articles published on Jul 23, 2019
English summary
Humiliated in Manchester airport says former captain wasim akram.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X