For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா -பந்த் அதிரடி பார்ட்னர்ஷிப்... சதத்தை தவறவிட்ட பந்த்... புஜாரா 77 ரன்களுக்கு அவுட்

சிட்னி : கேப்டன் அஜிங்க்யா இன்றைய 5வது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே நாதன் லியான் பௌலிங்கில் அவுட் ஆனார்.

இதையடுத்து இந்திய அணியின் ஆட்டம் கேள்விக்குறியானது. ஆயினும் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் ரிஷப் பந்த் தங்களது அதிரடி ஆட்டத்தின்மூலம் அணியை தூக்கி நிறுத்தினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டுல 500 ரன்கள் குவிப்பு... முதல் விக்கெட் கீப்பராக பந்த் சாதனை!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டுல 500 ரன்கள் குவிப்பு... முதல் விக்கெட் கீப்பராக பந்த் சாதனை!

அவர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கொடுத்தனர். இதில் 73 ரன்களை ரிஷப் பந்த் மட்டுமே அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் தொடர்

டெஸ்ட் போட்டிகள் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ள நிலையில், 3வது போட்டியை வெற்றி அல்லது சமனாக்க இந்தியா போராடி வருகிறது.

5வது நாள் ஆட்டம்

5வது நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த 3வது டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. தேநீர் இடைவெளியின் போது இந்தியாவின் வெற்றிக்கு 126 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் மற்றும் விஹாரி தங்களது நிதானமான ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

புஜாரா 77 ரன்கள்

புஜாரா 77 ரன்கள்

இந்நிலையில் காயங்களுக்கு இடையில் இன்றைய போட்டியில் களமிறங்கி விளையாடிய ரிஷப் பந்த் 97 ரன்களை அடித்துள்ளார். மற்றும் சத்தீஸ்வர் புஜாரா 77 ரன்களை அடித்துள்ளார். இருவரும் இணைந்து 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்துள்ளனர். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் குறிப்பிட்டு சொல்லும் வகையில் உயர்ந்துள்ளது.

புஜாரா நிலையான ஆட்டம்

புஜாரா நிலையான ஆட்டம்

குறிப்பாக இந்த பார்ட்னர்ஷிப்பில் ரிஷப் பந்த் மட்டுமே 73 ரன்களை குவித்துள்ளார். தன்னுடைய கையில் ஏற்பட்ட காயத்தின் இடையே இந்த ரன்னை அவர் அடித்துள்ளார். ஆயினும் இன்றைய போட்டியில் அவர் சதத்தை தவறவிட்டார். இதேபோல நிலையாக ஆடிவந்த புஜாராவும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Monday, January 11, 2021, 11:06 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
Hundred runs partnership between Pujara and Pant, 73 runs came from the bat of Pant
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X