For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் செம பிட் பாஸ்.. தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்ட கோஹ்லி!

டெல்லி: தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும். 100 சதவீத பிட்னஸ் மிகவும் அவசியம் என்றும் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து தொடருக்காக கிளம்பிப் போயுள்ளது. இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கோஹ்லி பேசினார். அப்போது வீரர்களின் உடல் தகுதி குறித்துப் பேசினார் கோஹ்லி.

சமீபத்திய பரபரப்பான யோ யோ டெஸ்ட்டுக்கு விடை தரும் வகையில் அவரது பேச்சு இருந்தது. முழு உடல் தகுதி முக்கியம் என்று தனது பேட்டியின்போது சுட்டிக் காட்டினார் கோஹ்லி. அவரது பேட்டியிலிருந்து:

100% பிட்னஸ்

100% பிட்னஸ்

நான் 100% உடல் தகுதியுடன் உள்ளேன்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். தற்போது கழுத்து வலி சரியாகி விட்டது. யோ யோ தேர்விலும் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

மும்பையில் தீவிரப் பயிற்சி

மும்பையில் தீவிரப் பயிற்சி

மும்பையில் 6 முதல் 7 பயிற்சிகளில் பங்கு பெற்று நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கி விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அதே வேளையில் இதுபோன்ற ஓய்வு காலங்கள் நம்மை மனதளவிலும் மற்றும் உடலளவிலும் மேம்படுத்த உதவும்.

உடல் தகுதி முக்கியம்

உடல் தகுதி முக்கியம்

சட்டேஸ்வர் புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா போல கவுண்ட்டி போட்டிகளில் ஆடி இங்கிலாந்து சீதோஷ்ண நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஒவ்வொரு போட்டியில் ஆடுவதற்கு முன்பும் 100 சதவீதம் உடல் தகுதி அவசியம் என்று கோஹ்லி கூறினார்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் இங்கிலாந்து அணியை சந்திக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐபில்2018 தொடரின் போது கோஹ்லிக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது.அதன் காரணமாக இங்கிலாந்து கவுண்ட்டி அணியான சசக்ஸ் அணியில் விளையாட முடியாமல் போனது. இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாட ஆயத்தமாகும் வகையில் கவுண்ட்டி போட்டிகளில் விளையாட முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சென்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 24, 2018, 12:33 [IST]
Other articles published on Jun 24, 2018
English summary
Team India captain Virat Kohli has said that he is 100% Fit and ready to go
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X