For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு போறேன்.. கிறிஸ் கெய்ல் போட்ட ஒற்றை ட்வீட்.. கொண்டாடி தீர்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இஸ்லாமாபாத்: ''நான் பாகிஸ்தானுக்குப் போகிறேன்'' என்று கிறிஸ் கெய்ல் போட்ட ஒரு ட்வீட்டை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது.

தோனி எடுத்த மிக முக்கிய முடிவு.. ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. விண்டேஜ் ஷாட்ஸ் ரெடி!தோனி எடுத்த மிக முக்கிய முடிவு.. ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. விண்டேஜ் ஷாட்ஸ் ரெடி!

ராவல்பிண்டி நேற்று முன்தினம் முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு தயாராக இருந்தது. ஆனால் அந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்த தொடரில் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனபின்பு குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என்பதும் போட்டியை நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ''எங்கள் நாட்டின் உளவுத்துறை பாதுகாப்பு அச்சறுத்தல் இருக்கிறது என்று அலர்ட் கொடுக்கிறது'' என்று பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டது.

பாகிஸ்தான் கண்டனம்

பாகிஸ்தான் கண்டனம்

நியூசிலாந்தின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. ''நியூசிலாந்து செய்ததை போல் வெறெந்த நாடும் மற்ற நாடுகளுக்கு செய்யாது'' என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் 'யுனிவர்சல் பாஸ்' என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் தொடர்பாக போட்ட ஒரு ட்வீட்டை பாகிஸ்தானியர் கொண்டாடி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்குப் போகிறேன்

பாகிஸ்தானுக்குப் போகிறேன்

''நான் நாளை பாகிஸ்தானுக்குப் போகிறேன். என்னுடன் யார் வரப்போகிறீர்கள்'' என்று கிறிஸ் கெய்ல் ட்வீட் போட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்து சென்று விட்ட நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடம் தெம்பூட்ட கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் செல்ல இருப்பதாகவும், அதனாலதான் அவர் இந்த ட்வீட்டை போட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. கிறிஸ் கெய்ல் ட்வீட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரீட்வீட் செய்துள்ளது.

முகமது அமீர்

முகமது அமீர்

பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், '' இங்கே உங்களை பார்க்கிறேன் லெஜண்ட்'' என்று கிறிஸ் கெயிலிடம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ''ஹாய் நியூசிலாந்து.. ஒரு பாகிஸ்தானியராக நாங்கள் உங்களை மன்னிப்போம், ஏனென்றால் நாங்கள் ஒரு அன்பான நாடு ஆனால் இந்த செயல் எதிர்காலத்தில் நிச்சயம் உங்களை பாதிக்கும்'' என்றும் முகமது ஆமீர் கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கிறிஸ் கெய்ல் வென்று விட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.

Story first published: Sunday, September 19, 2021, 18:42 [IST]
Other articles published on Sep 19, 2021
English summary
Pakistani fans are celebrating a tweet posted by Chris Gayle that I am going to Pakistan. Netizens have commented that Chris Gayle has won the hearts of Pakistan cricket fans around the world
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X