For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரென்ட்ஸ்.. அதனால அவரையே பயிற்சியாளராக போடுங்க..! திருந்தாத கோலி..!

Recommended Video

India Coach | அவரையே பயிற்சியாளராக போடுங்க..! ரவி சாஸ்திரிக்கு கோலி ஆதரவு- வீடியோ

மும்பை: இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் வர வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

உலக கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் 45 நாட்களுக்கு தற்போதிருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக்காலத்தை பிசிசிஐ நீட்டித்தது.

இடைப்பட்ட காலங்களில் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளிலும் பிசிசிஐ தீவிரமாக இறங்கியது. பதவிகளுக்கு வர விரும்புவோர்கள் விண்ணப்பிக்குமாறு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

ரோகித்துக்கும், எனக்கும் சண்டையா..?அப்படிக்கா போயி.. இப்படிக்கா வந்து பதில் சொன்ன கோலி..!! ரோகித்துக்கும், எனக்கும் சண்டையா..?அப்படிக்கா போயி.. இப்படிக்கா வந்து பதில் சொன்ன கோலி..!!

கபில் தேவ் குழு

கபில் தேவ் குழு

பலரும் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு புதிய பயிற்சியாளர்களை ஆலோசித்து தேர்வு செய்ய உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் செல்வதற்கு முன்பாக மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கோலி. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அதில்கலந்து கொண்டார்.

கோலியிடம் கேள்வி

கோலியிடம் கேள்வி

அப்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோலி பதில் கூறுகையில், இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழு அது குறித்து முடிவு செய்யும்.

இதுதான் எனது முடிவு

இதுதான் எனது முடிவு

ஆனால் அவர்கள் இதுவரை என்னிடம் இது தொடர்பான எனது விருப்பத்தை கேட்க வில்லை. அவர்கள் கேட்டால் நிச்சயம் என்னுடைய முடிவு குறித்து நான் பேசுவேன்.

ரவி சாஸ்திரி வேண்டும்

ரவி சாஸ்திரி வேண்டும்

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமானால், ரவி சாஸ்திரியே மீண்டும் இந்த பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும். நானும் அவரும் அணியின் முன்னேற்றம் குறித்தும், இக்கட்டான சூழலில் முடிவு குறித்தும் நிறைய பகிர்ந்திருக்கிறோம்.

நல்ல நட்பு

நல்ல நட்பு

நல்ல நட்பு எங்களிடையே இருக்கிறது. மற்ற வீரர்களும் ரவிசாஸ்திரி உடன் நல்ல அணுகு முறையில் உள்ளனர். இது குறித்து நான் பேசுவதற்கு வேறொன்றுமில்லை. விரைவில் விண்ணப்பங்கள் பெற்று, யார் பயிற்சியாளர் என்பதை தேர்வு குழு முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

Story first published: Monday, July 29, 2019, 20:45 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
I am happy if Ravi Shastri continues as Head coach says skipper Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X