டெய்லி 3 முட்டை சாப்பிடறேன்..! அப்பதான் சிக்ஸ் அடிக்க முடியுது..!! இந்திய இளம் வீரரின் காமெடி

போர்ட் ஆப் ஸ்பெயின்: நாள் தவறாது காலையில் 3 முட்டை சாப்பிடுவால் நன்றாக விளையாட முடிவதாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் காமெடியாக கூறி இருக்கிறார்.

இந்தியஅணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது. தொடரின் நாயகன் விருதை கோலி தட்டிச் சென்றார். இருப்பினும், அணியில் திறமையாக விளையாடிய இளம் வீரர்களில் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் ஸ்ரேயாஸ் அய்யர்.

2 போட்டிகளிலும் அரைசதம், 3வது போட்டியில் 41 பந்துகளில் 65 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டவர். அவரது பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைலராகி இருக்கிறது. அந்த பேட்டியை எடுத்தது மற்றொரு இளம் வீரரான சாஹல்.

சிக்சர் அடிக்க முடிகிறதா?

சிக்சர் அடிக்க முடிகிறதா?

அந்த பேட்டியில் நீங்கள் இவ்வளவு பெரிய சிக்சர்களை அடிக்கிறீர்களே எப்படி முடிகிறது ? 5 சிக்சர்களும் அபாரமாக இருந்தது? நீங்கள் அவ்வாறு அடிக்க காரணம் என்ன ? என்று சாஹல் கேள்வி கேட்கிறார்.

முன்பே திட்டம்

அதற்கு ஸ்ரேயாஸ் அய்யர் நகைச்சுவையாக கூறிய பதில் தான் இது: ஆரம்பத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை அடித்து நொறுக்க பிளான் பண்ணினேன்.

3 முட்டைகள் சாப்பிடுகிறேன்

3 முட்டைகள் சாப்பிடுகிறேன்

ஏனெனில் பூரன் உங்களது பவுலிங்கை காலி செய்தார். அப்பொழுது எனக்கு கோபம் வந்தது. அதற்கு தக்க பதிலடி கொடுக்க தீர்மானித்தேன். மேலும் நான் தினமும் காலையில் 3 முட்டைகளை சாப்பிடுகிறேன்

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அதிலிருந்து கிடைத்த பலம்தான் என்னை இந்த 5 பெரிய சிக்சர்களை அடிக்க வைத்தது என்று நகைச்சுவையாக சஹாலுக்கு பதிலளித்தார்ஸ் ஸ்ரேயாஸ் அய்யர். அவரது இந்த நகைச்சுவையான பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருவது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
I ate three eggs daily says shreyas iyer.
Story first published: Saturday, August 17, 2019, 18:54 [IST]
Other articles published on Aug 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X